/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-04T182057.289.jpg)
moringa leaves recipes: சூப்பர்ஃபுட்களில் ஒன்றாக வலம் முருங்கை இலை மரம் நம்முடை வீடுகளிலேயே பரவலாக வளர்க்கப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த அற்புத மரம் வறட்சியைத் தாங்க கூடிய மரவகை ஆகும். இவற்றின் இலைகள் மற்றும் காய்கள் நம்முடைய அன்றாட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியாவில், முருங்கை சாம்பாரில் சேர்க்கப்படுகிறது மற்றும் இலைகள் ரசம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத ஊட்டச்சத்து நன்மைகள் முருங்கையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உதாரணமாக, முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகம் என்றும் உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-04T184011.205.jpg)
மேலும், முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிட்டுள்ளது.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள முருங்கை இலையை சேர்த்து எப்படி இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-04T184021.822.jpg)
முருங்கைக்கீரை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
முருங்கை கீரை - 1/2 கப்,
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
வறுத்து பொடியாக்க
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பூண்டு - 3
காய்ந்த மிளகாய் - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
முருங்கைக்கீரை சாதம் சிம்பிள் செய்முறை:
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவி கொள்ளவும்.பிறகு அவற்றுடன் உப்பு, 3 3/4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து மூடிக்கொள்ளவும். பின்னர் 2 விசில் வந்ததும் தனலைக் குறைத்து 5 நிமிடம் கழித்து கீழே இறக்கவும்.
இப்போது மேலே வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் ஒரு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக மாற்றி வைத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து முருங்கைக்கீரையை நன்றாக சுத்தமாக அலசிக்கொள்ளவும். பின்னர், பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.
இப்போது, ஒரு காடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தலித்துகொள்ளவும். பின்னர், நசுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம், சிறிது உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து, அவை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்துவிடவும். கீரை நன்றாக வெந்ததும், அவற்றை சாதத்தோடு சேர்க்கவும்.
இறுதியாக முன்னர் நாம் வறுத்து பொடியாக மாற்றியுள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான மற்றும் சுவையான முருங்கைக்கீரை சாதம் ரெடியாக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசிக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-04T183815.409.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.