நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட விரும்பினால், முருங்கை கீரை எப்போதும் சிறந்த சாய்ஸ் ஆகும். பழங்கள், விதைகள், இலைகள், மொட்டுகள், பூக்கள் என முருங்கையின் அனைத்து வடிவங்களும் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முருங்கை இருக்கும் இடத்தில், ஆரோக்கியம் இருக்கும் என்பது அறிந்து கொள்ளுங்கள்
இந்நிலையில், தினை பயிற்சியாளரும், Crazy Kadchi நிறுவனருமான ஷாலினி ரஜனி, ஃப்ரஷ் முருங்கை இலைகளுடன் தினை ரொட்டி எப்படி செய்வதை என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
6 முதல் 8 ரொட்டி செய்திட தேவையானவை:
- 1 கப் புதிதாக அரைக்கப்பட்ட தினை மாவு
- 1 கப் நறுக்கிய புதிய முருங்கை இலைகள்
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 மிடியம் சைஸ் பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்
- சுவைக்க இளஞ்சிவப்பு உப்பு
- மாவை பிசைவதற்கு 1 கப் வெந்நீர்
செய்முறை
- முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றிவிட்டு, நறுக்கிய முருங்கை இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துவிட்டு 1 கப் தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த கலவை சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.
- பின்னர், அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, அதில் உப்பு, asafoetida, தினை மாவு சேர்க்க வேண்டும்
- மாவின் நிலைத்தன்மையைப் பெறும் வரை அனைத்தையும் நன்றாக கலக்கிவிட்டு, 10 நிமிடம் கடாயை மூடிவைத்துவிட வேண்டும்.
- பின்னர், அவற்றின் வெப்பநிலை குறைந்ததும், ஈரமான விரல்களால் நன்கு பிசைய வேண்டும்.
- தொடர்ந்து, பட்டர் பேப்ரை உபயோகித்து, மாவை மெலிசாக உருட்டிக்கொள்ளலாம். வேண்டுமானால், வாழை இலையையும் பயன்படுத்தலாம்.
- அதனை முன்பு உபயோகித்த கடாயிலே சமைக்க வேண்டும். வைப்பட்டால் குளிர்ந்த அழுத்தப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துங்கள். அவ்வளவு தான், அதனை பருப்பு கூடவோ அல்லது கறி கூடவோ வைத்து பரிமாற தொடங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil