Immunity-boosting drinks: இந்தியாவில் நிலவி வரும் இந்த அசாதரண சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் மற்றும் பானங்கள் (இம்யூனிட்டி பூஸ்டர்கள்) ஒரு மந்திர சொல்லாக மாறிவிட்டன எனலாம். ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் உதவும் பொருட்கள் நம்முடை வீட்டு சமையல் அறையில் உள்ளது என பலருக்கு தெரியாத ஒன்றாகவே உள்ளது.
ஜலதோஷம் ஏற்பட்டால் நம்முடைய வீடுகளில் வழங்கப்படும் மஞ்சள் பால் நம்மில் பலர் அறிந்த ஒன்றுதான். இவற்றை நமக்கு கொடுக்கும் போது சிறிதளவு மிளகு சேர்த்து கொடுப்பார்கள். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள பூண்டு பால் மற்றொரு சக்திவாய்ந்த வீட்டு வைத்தியம் ஆகும்.
அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த மற்றும் பனை சர்க்கரை மிட்டாயுடன் இனிப்பான பூண்டு பால் பருவகால பிரச்சினைகளைத் தணிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இது படுக்கைக்கு முன் கொழுப்பைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் வழங்கலை அதிகரிக்கவும் இந்த பூண்டு பால் கொடுக்கப்படுகிறது.
ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் ஷியாம் வி.எல் கருத்துப்படி, “சியாட்டிகா, வயிற்று வீக்கம், மலச்சிக்கல், குறைந்த முதுகுவலி, நாள்பட்ட மற்றும் தொடர்ச்சியான காய்ச்சல் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பூண்டு பால் மிகவும் பயனுள்ள தீர்வாகும்.”
"நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய செயலில் உள்ள பொருட்கள் இரண்டும் கொதிக்கும் பாலுக்கு மாற்றப்படுகின்றன. பால் பூண்டின் வெப்பத்தையும் வேகத்தையும் குறைக்கிறது," என்று டாக்டர் ஷியாமின் கூறுகிறார்.
பூண்டு பால் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
1¼ கப் - பால்
4 - பூண்டு கிராம்பு
2 தேக்கரண்டி - பனை சர்க்கரை
மஞ்சள் (விரும்பினால்)
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் நீங்கள் பூண்டுளின் தோலை உரிக்கவும். பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.
இப்போது, ஒரு அடுப்பில் பால் கொதிக்க வைக்கவும். அவை கொதித்த பிறகு அதில் நறுக்கப்பட்டு தட்டிய பூண்டு துண்டுகளை சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிவைக்கவும். இதில் நீங்கள் விருப்பினால் மஞ்சள் சேர்க்கலாம்.
பூண்டு மென்மையாகும் வரை கொதிக்க வைத்து, அதில் பனை சர்க்கரை சேர்த்து, அவை முழுமையாக கரைக்கும் வரை மிதமாக கொதிக்க விடவும். அவை தயார் ஆனதும் சூடாக பரிமாறி, மகிழவும்.
பின் குறிப்பு
இந்த தயாரிப்பு உங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒருவர் பூண்டு பால் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கோடைகாலத்தில் நெஞ்செரிச்சல், இரைப்பை, பெப்டிக் புண்கள் இருந்தால்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.