Immunity boosting foods Tamil News: உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இந்தியாவில் தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழலில் நோயெதிர்ப்பு சக்தி அவசியமானதாக உள்ளது. மேலும் இந்த நேரத்தில் நீங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் பல உணவுகளையும், பழங்களையும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவீர்கள்.
ஆனால் இந்த தருணத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அந்த வகையில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய முக்கிய 4 உணவு பொருட்களை இங்கு வழங்கியுள்ளோம்.
அவை எந்தெந்த உணவுப்பொருட்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக இப்பொது பார்க்கலாம்.
சர்க்கரை
சர்க்கரையைத் தவிர்ப்பது நீரிழிவு நோயாளியாக மாறுவதை தடுக்க உங்களுக்கு உதவும். இதை ஒரு பொருளாகக் கொண்ட உணவுகள் எல்லா வித்திலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து பிற சிக்கல்களுக்கு வழிவகுக்குகிறது.
உப்பு
அதிகப்படியான உப்பு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மோசமானது. சிப்ஸ், பேக்கரி பொருட்கள் மற்றும் உறைந்த உணவு பொருட்கள் போன்ற பல்வேறு வகையான உணவுகளில் உப்பு உள்ளடக்கம் அதிகமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு உட்கொள்ளலாம். இந்த வரம்பை மீறினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் என குறிப்பிடுகிறது.
வறுத்த உணவுகள் - ஃப்பிரைடு புட்ஸ்
இந்த வகையான உணவுகள் உங்களுக்கு சுவையாகவும் காரமாகவும் தோன்றலாம். ஆனால் அதிக அளவு உட்கொள்வது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
வறுத்த உணவு இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சமோசாக்கள், சிப்ஸ்கள் அல்லது ஆழமான வறுத்த பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
காஃபின்
அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும். தேநீர் அல்லது காபி அதிகமாக குடிப்பதால் உங்கள் தூக்க முறைகளைத் தொந்தரவு செய்யலாம். இது ஒரு அழற்சி பதிலை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“