வீட்டில் வளர்ப்பது சுலபம்: ஓமவல்லி இலையில் அவ்வளவு நன்மை இருக்கு!
Top health benefits of Omavalli or Karpooravalli in tamil: கற்பூரவல்லி சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். இது குழந்தைகளி ன் அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது.
Top health benefits of Omavalli or Karpooravalli in tamil: கற்பூரவல்லி சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். இது குழந்தைகளி ன் அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது.
Karpooravall or Omavalli benefits in tamil: கற்பூரவல்லி அல்லது ஓமம் என்று அழைக்கப்படும் இந்த அற்புத செடி மிகச்சிறந்த மூலிகை பண்புகளை கொண்டுள்ளது. இவை இந்தியா , இலகை போன்ற நாடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. மேலும், நம்முடைய வீடுகளில் பூ தொட்டியிலும் வளர்க்கப்டுகிறது.
Advertisment
கற்பூரவல்லி பொதுவாக ஒரு கிருமி நாசினியாகவும், காய்ச்சல், சளி, தலை வலிக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலைச் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சீதள இருமல் தீரும். உடல் சூட்டை தணிக்கவும், தலைவலிக்கு தீர்வு அளிக்கவும் இவை உதவுகிறது.
Advertisment
Advertisements
கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து, 2 மி.லி சாருடன் 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
தசைச் சுருக்கம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவி வந்தால், வந்த நோய்கள் பறந்து போகும்.
கற்பூரவல்லி சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். இது குழந்தைகளி ன் அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது.
கற்பூரவல்லியை எப்படி வளர்ப்பது?
கற்பூரவல்லியை வீட்டில் வளர்ப்பது சுலபமான ஒன்றாகும். இதன் தண்டை எடுத்து ஒரு சிறிய தொட்டியில் நட்டால் அது புதர் போல வளர்ந்து வரும்.
இதன் இலைகளில் பஜ்ஜி தயார் செய்யலாம். ரசம் வைக்கலாம். மேலும், கஷாயம் செய்து பருகி வரலாம்.
கற்பூரவல்லி கஷாயம் தயார் செய்ய, அதன் இலைகளை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து சிறிதளவு பனகற்கண்டு சேர்த்து பருகி வரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“