Advertisment

ஆரஞ்சு பழத்தை விட விட்டமின் சி அதிகம்… முருங்கை இலை பயன்படுத்துவது எப்படி?

murungakkai recipe for high blood pressure and diabetes tamil: முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகம்

author-image
WebDesk
Nov 03, 2021 07:17 IST
moringa leaves benefits tamil: blood pressure and diabetes curing murungakkai recipe

moringa leaves benefits tamil: கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசிமான ஒன்றாகும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாங்கள் அன்றாட சில குறிப்புகளை இங்கு வழங்கி வருகிறோம்.

Advertisment

அந்த வகையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை இலை எப்படி பயன்படுவது என்று இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

சூப்பர்ஃபுட்களில் ஒன்றாக வலம் முருங்கை இலை நம்முடை வீடுகளிலேயே பரவலாக வளர்க்கப்படுகிறது. முருங்கை மரம் இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வறட்சியைத் தாங்க கூடிய மரவகை ஆகும். இவற்றின் இலைகள் மற்றும் காய்கள் நம்முடைய அன்றாட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியாவில், முருங்கை சாம்பாரில் சேர்க்கப்படுகிறது மற்றும் இலைகள் ரசம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

moringa benefits in tamil: Health Benefits of Moringam leaves in tamil

வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத ஊட்டச்சத்து நன்மைகள் முருங்கையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உதாரணமாக, முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகம்.

மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் நிரம்பியுள்ளது

பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட முருங்கை பயன்படுத்தப்படுகிறது. வளரும் நாடுகளில், மக்கள் தங்கள் உணவில் போதுமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் இல்லாத நிலையில், முருங்கை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முருங்கை இலைகளில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன.

இது தவிர, இலைகளில் ஐசோதியோசயனேட்ஸ் என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

publive-image

2014 ஆம் ஆண்டில், உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட 30 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஏழு கிராம் முருங்கை பொடியை தவறாமல் உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மூன்று மாதங்களின் முடிவில், இரத்தப் பரிசோதனையில் சராசரியாக 13.5% சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு உதவும் முருங்கை

முருங்கை இலைகள் வழங்கும் மற்றொரு மருத்துவ நன்மை இரத்த அழுத்த அளவைக் குறைப்பதாகும், இது ஆபத்தான இதய நோய்களைத் தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று ஊட்டச்சத்து நிறைந்த உணவு இல்லாத உணவாகும். தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்தக் கழகத்தின் கூற்றுப்படி, பிபி அளவைக் குறைக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்த உணவு அவசியம்.

publive-image

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க அல்லது தடுக்க பொட்டாசியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும் அதே ஆய்வு குறிப்பிடுகிறது.

முருங்கை இலையில் பொட்டாசியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை விட ஒரு கப் முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய அதிக செறிவு ஊட்டச்சத்துக்கள் இந்த இலை பச்சையை மற்ற சூப்பர் கீரைகளான கேல் போன்றவற்றை விட ஆரோக்கியமானதாக ஆக்குகிறது.

இலைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் ஐசோதியோசயனேட்ஸ் போன்ற உயிர்வேதியியல் சேர்மங்கள் நிரம்பியுள்ளன, இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Healthy Food Tips #Tamil Health Tips #Health Tips #Moringa Leaves #Lifestyle #Food Tips #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment