இம்யூனிட்டி, ஜீரண சக்தி… அன்னாசியில் இவ்வளவு நன்மை இருக்கு!
Health benefits of pineapple in tamil: அன்னாசியில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக்கிறது.
Health benefits of pineapple in tamil: அன்னாசியில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக்கிறது.
pineapple benefits in tamil: நா வறட்சியை குறைக்கும் ஆற்றல் கொண்ட அற்புத பழமாக அன்னாசிப் பழம் உள்ளது. இவற்றின் சாறும் மிக சுவையாக இருக்கும். நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஒரு பழமாகவும் இது உள்ளது.
Advertisment
கண்பார்வைக்கு உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமலும் தடுக்கிறது.
Advertisment
Advertisements
ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது
அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம் என்பது நினைவுகூரத்தக்க ஒன்றாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அன்னாசி பழத்தில் வைட்டமின்-சி சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். உடல் காயங்களும் வெகு விரைவில் ஆறும். இவற்றில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. மேலும், நார்ச்சத்துகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக் கூடியவை என்பதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“