pomegranate benefits in tamil: தெய்வீக பழம் என்று அழைக்கப்படும் மாதுளை பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ட்டியூமர் பண்புகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாக இது உள்ளது. மாதுளையில் இரண்டு சேர்மங்கள் உள்ளன. புனிகலஜின் மற்றும் பியூனிசிக் அமிலம். இது அனைத்து சக்திவாய்ந்த நன்மைகளையும் தருகிறது.
மாதுளையை தினமும் சாப்பிடுவது அல்லது சாறு குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த உதவியாக இருக்கும். மேலும், டைப் -2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், செரிமானத்தை சீராக்குகிறது மற்றும் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ள மாதுளையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்.
மாதுளையின் மருத்துவ பயன்கள்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு வகை மாதுளையும் உடலுக்கு சக்தியளிக்கும்.
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.
இவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
இனிப்பு மாதுளயை சாப்பிட்டு வருவதால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. மற்றும் இருமலை நிறுத்துகிறது.
மாதுளை சாறு அல்லது ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும்.அதோடு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளையை அன்றாட சாப்பிடுவதால் இதய நோய்கள், இதய பலவீனம் நிவர்த்தியாகும். ரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் நலம் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.