கண் பார்வை, ஜீரண சக்தி… பூசணியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
Actress Bhagyashree reveals the many health benefits of pumpkin in tamil: பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல வளமான மூலமாகும்.
Actress Bhagyashree reveals the many health benefits of pumpkin in tamil: பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல வளமான மூலமாகும்.
pumpkin benefits in tamil: பூசணி அதன் சாதுவான சுவை மற்றும் கூவி போன்ற அமைப்பு (சமைக்கப்படும் போது) காரணமாக மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கிறது. ஆனால், பூசணிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. இவற்றின் பல்வேறு நன்மைகள் குறித்தும், அவற்றை எப்படி எளிய வழியில் உட்கொள்ளலாம் என்பது குறித்தும் உடல்நலம் மற்றும் உடற்தகுதி தொடர்பான குறிப்புகளை அடிக்கடி பகிர்ந்து வரும் பாக்யஸ்ரீ தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
“பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும், இது தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது." என்று பாக்யஸ்ரீ கூறியுள்ளார்.
இந்த அற்புத காய்கறியில் ஏராளமான நன்மைகள் நிரம்பி இருந்தாலும், அவற்றை குழந்தைகள் உண்ண ஏனோ மறுக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எப்படி ஊட்டுவது என்று பாக்யஸ்ரீ இங்கு ஒரு தீர்வு கொடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
“உங்கள் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லாவின் கதையைச் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தை இளவரசரை சந்திக்க ஒரு பூசணி ரதத்தில் சென்றார் என குறிப்பிடுங்கள்" என்று அவர் கூறுகிறார்.
"பூசணியை சூப் தயாரிக்கவும், கிரேவிகளுக்கு சீரான தன்மையை சேர்க்கவும் மற்றும் புதுமையான இனிப்பு உணவுகளை தயார் செய்யும் கூட பயன்படுத்தலாம். எனவே, பூசணிக்காயைக் குறிப்பிடுவதைக் கண்டு துவண்டு விடுபவர்களுக்கு, அதை மறைத்து விடுங்கள்,” என்று பாக்யஸ்ரீ தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிடுகிறார்.