ஜீரணம், எடை இழப்புக்கு உதவும் கறிவேப்பிலை - புதினா ஜூஸ்… சிம்பிள் ஸ்டெப்ஸ் இதுதான்!
curry leaves and mint juice benefits in tamil: கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்க வல்லதாகவும், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.
curry leaves and mint juice benefits in tamil: கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்க வல்லதாகவும், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.
curry leaves - mint juice recipe in tamil: நல்ல செரிமானம் என்பது நிலையான எடை இழப்புக்கான ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும். அவை இதயம், குடல் மற்றும் நீரிழிவு மேலாண்மைக்கும் நல்லது. உங்களிடம் சிறிது நேரம் இருந்தால், கீரை அல்லது செலரி போன்ற சில காய்கறிகளையும் கறிவேப்பிலையையும் சேர்த்து ஒரு ஜூஸாக பருகி வரலாம். இவற்றுடன் சில புதினா இலைகளையும் சேர்த்து கொண்டால் இந்த ஜூஸ் மேலும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
Advertisment
இந்த ஜூஸில் முக்கிய பொருளாக உள்ள கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை எரித்து எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், இவை செரிமான பிரச்சனைகளைப் போக்க வல்லதாகவும், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலை - புதினா ஜூஸ் தயார் செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கறிவேப்பிலை - 1 கைப்பிடி, கொத்தமல்லி - சிறிது, புதினா - 1 கைப்பிடி, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை - புதினா ஜூஸ் சிம்பிள் செய்முறை
முதலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
இவற்றை நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.