Summer drinks in tamil: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த தருணத்தில் குளிர்ச்சியான உணவுகள், பழங்கள் மற்றும் பானங்களை தெரிவு செய்து பருகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இந்த கோடை வெயிலில் இருந்து புத்துணர்ச்சி பெற உதவும் குளிர் பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த இந்த குளிர் பானங்கள் நமது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பானங்கள் நோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. வெப்பத்தைத் தணிக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நீங்கள் அவற்றை பருகி வரலாம்.
1.புதினா லஸ்ஸி
இந்த பானம், பெயருக்கு ஏற்றாற்போல், புதினாவின் நன்மையையும் லஸ்ஸியின் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு பாத்திரத்தில் சிறிது சர்க்கரை, உலர்ந்த புதினாவுடன் தயிர் போட்டு கலக்கவும். பிறகு சில ஐஸ் கட்டிகளைச் சேர்த்து ஒரு சிட்டிகை அரைத்த சீரகத்தால் அலங்கரிக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி, ஈ, ஏ ஆகியவை நிறைந்த புதினா, சரியான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- ஹலீம் அல்லது சாலியா விதைகள் நிரம்பிய பப்பாளி ஜூஸ்
இந்த பானம் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி மிகுந்து காணப்படுகிறது. இந்த அற்புத பானம் தயார் செய்ய தோலுரித்த பப்பாளியை ஊறவைத்த ஹலீம் அல்லது சாலியா விதைகளுடன் கலந்து பருகி வரலாம்.
- நன்னாரி
நன்னாரி வேர்கள் ஆயுர்வேதத்தில் பரவலாக பிரபலமான ஒரு குளிர்ச்சியான மூலிகையாகும். நன்னாரி அல்லது அனந்தமுல் என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகையின் வேர்கள், சுண்ணாம்பு மற்றும் ஐஸ் கலந்து ஒரு சுவையான பானம் தயாரிக்க பயன்படுகிறது.
நம்முடை ஊர்களில் நன்னாரியில் சர்பத் செய்தும் கொடுக்கிறார்கள். அவற்றை நாம் அடிக்கடி பருகி வரலாம்.
- கோகம் அத்தி சர்பத்
ஒரு ஜாடியில் கோகம், அத்திப்பழம், சீரகத்தூள் மற்றும் கல் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இப்போது, அனைத்தையும் கலக்கவும். குளிர்ந்த நீரில் ஒரு உயரமான கிளாஸில் சில தேக்கரண்டி சேர்த்து பருகி வரலாம்.
- சாண்டல்வுட் ஐஸ் டீ
சந்தனம் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் பொருள். சாண்டல்வுட் ஐஸ் டீ அதன் புத்துணர்ச்சியூட்டும் சுவைகளுடன் கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்தால், கூடுதல் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.