pomegranate leaves benefits in tamil: தெய்வீக பழம் என்று அழைக்கப்படும் மாதுளை பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ட்டியூமர் பண்புகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாக இவை உள்ளன. இவற்றில் இரண்டு சேர்மங்கள் உள்ளன. அவை புனிகலஜின் மற்றும் பியூனிசிக் அமிலம் ஆகும். இது அனைத்து சக்திவாய்ந்த நன்மைகளையும் தருகிறது.
மாதுளை இலையின் அற்புத நன்மைகள்:
மாதுளையை தினமும் சாப்பிடுவது அல்லது சாறு குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த உதவியாக இருக்கும். மேலும், இவை டைப் -2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், செரிமானத்தை சீராக்குகிறது மற்றும் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது.

மாதுளையின் பழம், இலை, பூ, பட்டை என மரத்தின் அனைத்து பகுதிகளையும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தலாம். அதிலும் மாதுளை பழத்தை போல இலையும் நல்ல மகத்தான சக்தி வழங்கக்கூடியதாகும். மேலும், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகள் பயன்படுகின்றன.
மாதுளை இலையில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வாய் பகுதியில் படர்ந்திருக்கும் பாக்டீரியாக்களை அப்புறப்படுத்த உதவுகின்றன. இவற்றின் சாற்றை வாய் புண் உள்ளார்கள் பயன்படுத்தலாம்.
சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலையில் தேநீர் தயாரித்து பருகி வரலாம்.
மாதுளை இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.
மாதுளை இலை தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவுகிறது.

இருமலுக்கு ஏற்ற மாதுளை இலைத் தேநீர்; எப்படி தயார் செய்வது?
முதலில் ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அவை நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தேநீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உங்களுக்கு வந்த இருமல் தணியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“