நீரிழிவு முதல் உடல் இழப்பு வரை… கிர்ணி பழம் சாப்பிடும்போது செய்யக்கூடாத தவறு இதுதான்!
kirni palam or Muskmelon - Benefits, Nutrition Facts in tamil: கிர்ணி பழத்தில் மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.
kirni palam or Muskmelon - Benefits, Nutrition Facts in tamil: கிர்ணி பழத்தில் மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.
Tamil health tips: கோடைகாலத்தில் உட்கொள்ள ஏற்ற பழ வகைகளில் கிர்ணி பழத்திற்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத பழம் , உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே மத்தியில் மிகவும் புகழ் பெற்ற பலமாக வலம் வருகிறது. இது அழகான சருமமும் கிடைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
Advertisment
கிர்ணி பழத்தின் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்:
கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவைகள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்மபடுத்த உதவுகிறது.
Advertisment
Advertisements
2003-ம் ஆண்டு அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து துறை நடத்திய ஒரு ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறிந்தார்கள்.
கிரணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதை கட்டுப்படுத்த உதவுகிறது.
இவற்றில் மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.
கிர்ணி பழ ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்று கோளாறுகளை குறைக்க முடியும்.
கிர்ணி பழம் சாப்பிடும்போது செய்யக்கூடாத தவறு என்ன?
கிர்ணி பழத்தை வெட்டிய உடனே சாப்பிட்டுவிட வேண்டும். வெட்டிய பிறகு அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால், உடலுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும். எனவே, அதை தவிர்க்க வேண்டும் என்பதை மனத்தில் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“