Weight loss drink Jaggery and Lemon Tamil News: சமீப காலமாக உடல் எடை இழப்பு குறித்து பெரும்பாலானோர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உடல் எடை இழப்பில் இருந்து தங்கள் கவனத்தை சிதற செய்கின்றனர். நீங்கள், உங்களுடைய எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு, உடற்பயிற்சியிலும், உட்கொள்ளும் உணவுகளிலும் உங்கள் கவனம் இருப்பது அவசியமான ஒன்றாகும். அதிலும் ஊட்டச்த்துக்கள் மிகுந்து காணப்படும் ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து உண்ணுதல் வேண்டும்.
உடல் எடை எப்படி குறைப்பது என நீங்கள் யோசிப்பவராக இருந்தால் உங்களுக்காக சில உடல் எடை இழப்பு டிப்ஸ்களை எங்கள் இணைய பக்கத்தில் தினந்தோறும் வழங்கி வருகிறோம். அவைகளை நீங்கள் மறக்காமல் பின்பற்றலாம்.
இப்போது, இன்றைய உடல் எடை இழப்பு குறித்த குறிப்பிற்கு வருவோம். இன்று நாம் பார்க்க உள்ளது, உடல் எடை எளிதில் குறைக்க உதவக்கூடிய பானம் ஆகும். இந்த சுவையான பானத்தை உங்கள் வீட்டிலேயே தாயார் செய்யலாம். இந்த பானத்தில் இரண்டு முக்கிய மூல பொருட்கள் உள்ளன. அவை வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகும். இவை இரண்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய உணவு பொருட்கள் ஆகும். மேலும் இவை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும்.
உங்களுடைய உணவுகளில் வெல்லத்தை சேர்க்கும் போது, அவை உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது
எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவை நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
எலுமிச்சை மற்றும் சேர்த்து உட்கொள்ளும் போது, உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான அளவு வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் துத்தநாகத்தையும் கொடுக்கிறது. வெல்லம் சர்க்கரையின் ஆரோக்கியமான மாற்றாக உள்ளது. அதன் கலோரி எண்ணிக்கையில் குறைவாகவும் உள்ளது. ஆனால் இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்து காணப்படுகிறித்து. எலுமிச்சை மற்றும் வெல்லத்தின் நன்மைகளில் முக்கியான ஒன்றாக உள்ளது என்னவென்றால், உங்கள் செரிமான அமைப்பை சுத்தமாகவும், உங்கள் சுவாச அமைப்பை தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பானம் தயாரிக்க, உங்களுக்கு ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிறிய துண்டு உலர்ந்த வெல்லம் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது மூன்று பொருட்களையும் நன்றாக கலக்க வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைக்கும் வரை தொடர்ந்து கிளறவும். முடிந்ததும், பானம் நுகர்வுக்கு தயாராக இருக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை மறக்காமல் பருகி வந்தால், நிச்சியமாக உங்கள் எடை குறையும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
தற்போது கோடைகாலம் நெருங்கி வருவதால் இந்த பானத்தோடு ஒரு சில புதினா இலைகளையும் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. அவை உங்கள் உடலை குளிர்வித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இப்படி புத்துணர்ச்சியை தரும் பானத்தை நீங்கள் ஏன் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க கூடாது!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)