Advertisment

இஞ்சி, லெமன், சீரகம்... எடை குறைப்புக்கு இவ்ளோ ஈசி வழியா?

5 Drinks That will Help your Boost Your Metabolism in tamil: பெருஞ்சீரக தேநீர் வீக்கம், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், உடல் எடையை குறைக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

author-image
WebDesk
Nov 01, 2021 07:21 IST
Weight Loss drinks in tamil: 5 Drinks That will Help your Boost Your Metabolism tamil

Weight Loss drinks in tamil: இன்றைய நாகரிக உலகில் எடை இழப்பு மிக முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வயதினர் தங்கள் எடை குறைப்பில் அதீத கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர். எனினும், அவர்கள் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவுகளை தெரிவு செய்து உட்கொள்கிறார்களாக என்பதில் கேள்வி எழுகிறது. 

Advertisment

சரியான எடை இழப்பு என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உறங்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை சார்ந்துள்ளது. இதில் நம்முடைய உணவுப் பழக்கம் முக்கிய இடத்தை பிடிக்கும் நிலையில், எடை இழப்பை ஊக்குவிக்கும் 5 முக்கிய மற்றும் எளிய பானத்தை இங்கு பரிந்துரை செய்துள்ளோம். 

பெருஞ்சீரக தேநீர்

சான்ஃப் என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் சிறந்தாக உள்ளது. இவை நமது ள் வாய்க்கு தேவையான புதினா சுவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் வாய் புத்துணர்ச்சியூட்டலாகப் பரிமாறப்படுகிறது.

publive-image

பெருஞ்சீரகத்தில்  ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பெருஞ்சீரகம் தேநீர் வீக்கம், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், உடல் எடையை குறைக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

பெருஞ்சீரக தேநீர் தயாரிக்க, இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து, கொதிக்கவைத்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து ருசிக்கவும். 

எலுமிச்சை தேநீர் 

எலுமிச்சை வைட்டமின் சி மிகுந்தது. இதில் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றி நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சை தேநீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்ப்பதன் மூலம், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

publive-image

எலுமிச்சை தேநீர் செய்ய இரண்டு கப் தண்ணீர் எடுத்து, ஒரு எலுமிச்சையை பிழிந்து, 1/2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். நன்றாக கலந்து பருகவும். 

அஜ்வைன் டிடாக்ஸ் தேநீர் அல்லது துளசி தேநீர்

அஜ்வைன் அல்லது துளசி செரிமானத்திற்கு நன்றாக வேலை செய்கிறது. இவை மருத்துவப் பயன்களுக்காக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அஜ்வைன் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

publive-image

அஜ்வைன் டிடாக்ஸ் அல்லது துளசி தேநீரை உருவாக்க, இரண்டு கப் தண்ணீரை எடுத்து, ஒரு டீஸ்பூன் அவியனில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். கலவையை வேகவைத்து, வடிகட்டி, சூடாகவும். சுவையை அதிகரிக்க எலுமிச்சையையும் சேர்க்கலாம்.

இஞ்சி - எலுமிச்சை தேநீர் 

இரைப்பைக் குழாயின் பிரச்சினைகளுக்கு இஞ்சி எலுமிச்சை பானம் சிறந்தது. இது வீக்கம் மற்றும் பிடிப்புகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் பெக்டின் குடலை மேம்படுத்துவதோடு, நல்ல நச்சுப் பானமாகவும் மாற்றுகிறது.

publive-image

இஞ்சி எலுமிச்சை பானத்தை தயாரிக்க, ஒரு மிக்ஸியில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து, சிறிது ஐஸ், 1 அங்குல இஞ்சி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். சுவையை அதிகரிக்க ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். 

சீரகம் இலவங்கப்பட்டை பானம்

இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக உள்ளது, அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. சீரகம், மறுபுறம், செரிமானத்திற்கு நல்லது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

publive-image

இந்த அற்புத பானம் தயாரிக்க, ஒரு பெரிய வாணலியை எடுத்து, அதில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும். ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பானத்தை வடிகட்டி, சூடாக குடிக்கவும். இவற்றுடன் நீங்கள் சிறிது உப்பு, எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Healthy Food Tips #Tamil Health Tips #Health Tips #Lifestyle #Weight Loss #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment