Advertisment

"நீங்கள் ஏன் இங்கு அடிக்கடி சாப்பிடக் கூடாது?" - மறைந்த சமையல்காரருக்காக உருகும் அஞ்சு பாபி ஜார்ஜ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sai cook, sai covid 19 death, india sports coronavirus death, anju bobby george, india olympic sports, indian sports, sports news, latest tamil sports, cricket news, ஸ்போர்ட்ஸ், விளையாட்டு செய்திகள்

sai cook, sai covid 19 death, india sports coronavirus death, anju bobby george, india olympic sports, indian sports, sports news, latest tamil sports, cricket news, ஸ்போர்ட்ஸ், விளையாட்டு செய்திகள்

"அவர் பல ஆண்டுகளாக எங்களுக்கு உணவளித்தார். அவர் பெங்களூரு விளையாட்டு ஆணையத்தில் எனது குடும்பத்தில் ஒருவரைப் போல இருந்தார், என கடந்த 23 ஆண்டுகளாக பெங்களூரு விளையாட்டு ஆணையத்தில் சமையல்காரராக பணிபுரிந்த 55 வயது சமையல்காரர் குறித்து முன்னாள் இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த ஞாயிறன்று திடீர் மாரடைப்பால் அவர் மரணமடைந்த பிறகு நடத்திய சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

"கடைசியாக நான் அவரை லாக் டவுன் அறிவிப்பதற்கு முன்பு சந்தித்தேன். அப்போது நான் சமையலறைக்குள் சென்றபோது அவர் எனக்கு காபி பிடிக்கும் என்று தெரிந்து, காபி தயார் செய்து கொண்டிருந்தார். மேலும், எனது மெஸ்ஸில் நீங்கள் ஏன் அடிக்கடி சாப்பிடுவதில்லை?" என்று என்னிடம் கோபித்துக் கொண்டார். அது ஒரு மகிழ்ச்சியான உரையாடலாக எனக்கு அமைந்தது. அவர் காலமானார் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று அஞ்சு கூறினார்.

'எனது பவுன்ஸ் பந்தை சச்சின் சிக்ஸ் அடிக்க விரும்பினேன்' - நல்லவர் சோயப் அக்தர் பேட்டி

எஸ்.ஏ.ஐ வளாகத்தில் பயிற்சி மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க மே 15 அன்று 300 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியத்தில் 16 பேர் கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் காலமானார். அந்தக் கூட்டத்திற்கு சென்ற மாற்றவர்கள் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையத்தின் செய்திக்குறிப்பில், "அந்த நபர் SAI மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு தெர்மல் சோதனை உட்பட தேவையான அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது.அவர் உள்ளே செல்ல முற்றிலும் எந்தத் தடையும் இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர் மாஸ்க் அணிந்திருந்தார், கை சுத்திகரிப்பு மருந்தும் அவருக்கு கொடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

ஆணையம் மேலும் கூறுகையில், "இறந்த அந்த குறிப்பிட்ட நபர், கூட்டத்திற்குப் பிறகு விரைவில் வெளியேறினார், மேலும் அங்கு தங்கியிருந்த வீரர்கள் அல்லது பிற ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை." கூட்டத்தில் கலந்து கொண்டு வளாகத்திற்குள் வசிக்கும் நான்கு அதிகாரிகள் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவரது தகனத்திற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவரது இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள விரும்பாதவர்கள் கூட, அந்த நபர் குறித்து உருக்கமாக பேசினர்.

பெண்கள் விடுதியில் சமையல்காரராக பணியாற்றிய அந்த நபர் குறித்து அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், "நான் 1998 இல் பெங்களூர் விடுதிக்குச் சென்றேன், 2003 வரை அங்கே இருந்தேன். அந்த நேரத்தில், ஆண்களுக்கு உணவளித்தபின் அவர் சமையலறைக்குள் வருவார், அவர் எங்களுக்காக கூடுதலாக சமைப்பார், நாங்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வார்," என்று அவர் நினைவு கூர்ந்தார் .

"அவர் எப்போதும் என் பிள்ளைகளிடம் கூறுவார், "அகாடமியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து உங்கள் தாய்க்கு உணவளித்தேன். மேலும் அவர் ஒரு சர்வதேச விளையாட்டு வீரராக வளர்வதைப் பார்த்தேன், இப்போது அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு உணவளிப்பதும், நீங்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாகஉள்ளது" என்று அவர் கூறுவார் .

அண்ணன் அடித்தால் அடி; இடித்தால் இடி; மிதித்தால் மிதி - 30 நொடிகளில் பஞ்சரான பாகுபலி (வீடியோ)

'நான் வளாகத்திற்குச் செல்லும் போதெல்லாம் அவரை இழப்பேன்' என்று கூறுகிறார்.

ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு தந்தையான அந்த நபர், வளாகத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்தார். அவர் ஓரிரு இணை நோய்களால் பாதிக்கப்பட்டார், ஆனால் அவர் ஒரு மருத்துவமனையில் உறவினரைப் பார்க்கச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்ட பின்னர் குடும்பத்தை சந்திக்க யாரையாவது அனுப்பியதாகவும், வரும் நாட்களில் அவரது குடும்பத்திற்கு உதவுவதாகவும் எஸ்.ஏ.ஐ பெங்களூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment