Tamil Nadu news today updates : காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள தேவிந்தர் சிங் என்பவர், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை, ஸ்ரீநகர் விமானநிலைய பகுதியில் தேடப்படும் தீவிரவாதிகள் காரில் செல்வதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 2 தீவிரவாதிகளுடன். தேவிந்தர் சிங் உடன் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பெரிய தாக்குதல்களில் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
பொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே! சோகத்தில் அரசு ஊழியர்கள்!
Tamil Nadu News Today Updates :
2019 சப்-இன்ஸ்பெக்டர் முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. ஜனவரி 10ம் தேதி நடக்க இருந்த தேர்வு 13ம்(அதாவது இன்று ) தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்(டிஎன்யூஎஸ்ஆர்பி) தெரிவித்திருந்தது.
சென்னை புத்தக கண்காட்சி பிரச்னையில் பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைதுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது கருத்து சுதந்திரத்தை நசுக்கு செயல் என அரசை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்
Web Title:News today live updates tamilnadu news pongal holiday pongal news caa act delhi protest
முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில் திட்டங்கள் மூலம் 6,673 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடு முழுவதும் மக்கள் ஆதரவுடன் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டங்களுக்கு தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும்தான் காரணம் என்றாலும் நீண்ட காலமாக தேக்கிவைத்த கோபத்தின் வெளிப்பாடும் போராட்டங்களுக்கு காரணம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி என்பதுதான் நாடு தற்போது எதிகொண்டுள்ள பிரச்னை. இதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே நாட்டை பிரித்தாளும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எழுப்புகின்றனர்.” என்று கூறினார்.
தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: இந்தியப் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி இளைஞர்களிடம் பிரதமர் மோடி விளக்க வேண்டும் . இளைஞர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்; அதைவிடுத்து அவர்களை அடக்கக் கூடாது என்று கூறினார்.
சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து பங்கெடுப்பாளர் ஒருவரை வெளியேற்றியதற்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் உதவித் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவித்த காங். அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் சந்திப்பு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில், வார்டு மறுவரையரை தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் ஆணைய அலுவலத்தில் நடைபெற்றது.
நாமக்கல் : மோகனூரில் 2014-ம் ஆண்டு மனைவி மகேஸ்வரியை கொலை செய்த கணவர் செல்லதுரைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது
பெங்களூருவில் கைதானவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலை. வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷியிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் எஸ்.ஐ தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி பிடிபட்டார். தேர்வில் காபி அடித்த முதல்நிலைக் காவலர் மணி உடனே வெளியேற்றப்பட்டார்
பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் என மேற்குவங்க மாநில பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
CAA, NRC-ல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்; மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது
பிரச்னைகளை ஏற்படுத்தி பொருளாதார மந்த நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி
- சோனியாகாந்தி
காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல்
பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக 9 பேரை கைது செய்துள்ளது கியூ பிரிவு; கைதான இஜாஸ்பாட்ஷா தான் மும்பை சென்று 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்ததாக தகவல்
குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஆஜரான தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி விசாரணை
சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஆஜரானவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு பரிசோதனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.30, 256க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கழிவறையில் ஆண்களுக்கான பகுதியில் பாரதியார் படம் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அப்படம் நீக்கப்பட்டது
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை
திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை
குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தற்போதைக்கு எதையும் வெளியிட முடியாது - டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்.
பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு.
பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு.
கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 19லிருந்து ரூபாய் 12 ஆக குறைத்து டிராய் அறிவித்துள்ளது. ரூபாய் 5ஆக இருந்த கட்டணம் ரூபாய் 19 வரை உயர்ந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நிறுவனமும் ரூபாய் 12க்கு அதிகமாக சேனலின் கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என டிராய் அறிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
”பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது” என்று சட்டப்பேரவையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே நாங்கள் விசாரிக்க இருக்கிறோம் என 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு. வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொங்கல் விடுமுறை நாட்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்வது கடும் கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்
ஆய்வை ரத்து செய்து, ஊழியர்கள் பொங்கல் திருநாளை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் - ஸ்டாலின்
பாலியல் வல்லுறுவு வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம் : தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த 4 பேரை போலிசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமைவு சபரிமலை வழக்கின் வாதங்களை 3 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக கூறியுள்ளது.
முன்பெல்லாம் சபரிமலைக்கு மலையேறத் தொடங்கும் பகுதியான பம்பையில் இருக்கும் கணபதி கோயிலில் கூட பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் தற்போது பம்பை வரை எந்த வயது பெண்களானாலும் செல்வதற்கு அனுமதி உண்டு. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் குறிப்பிடலாம்.
அதுபோலவே சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு எவரும் வழக்குத் தொடுக்க தேவை இல்லை. அது அந்தந்த காலத்திற்கு ஏற்ப இயல்பாகவே நடந்தேறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் எனக்கில்லை.
மேலும் படிக்க, மாற்றங்கள் இயல்பாக நடக்கட்டும்!
முஸ்லீம் பெண்கள் மசூதிக்குள் நுழைவது தொடர்பான வழக்கு நீதிபதி போப்டே தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு காத்திருக்கிறது. பெண் பிறப்புறுப்பு சிதைவு தொடர்பான வழக்கும், பார்சி பெண்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கும் அரசியல் சாசன அமர்வுக்காக காத்திருக்கின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த அமர்வுகள் இன்னும் அமைக்கப் படவே இல்லை என்பது தான்.
மேலும், விவரங்களுக்கு :
மறுஆய்வில் சபரிமலை தீர்ப்பு, காத்திருக்கும் சட்டப் போர்
Explained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட 3 வழக்குகள் என்னென்ன ?
உச்சநீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு; மத நடைமுறையில் அத்தியாவசிய சோதனை
1. முஸ்லீம் பெண்கள் மசூதிகள் மற்றும் தர்காக்களில் நுழைவது :
2.தாவூதி போரா சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு சிதைவு வழக்கு:
3. பார்சி அல்லாதவர்களை மணந்த பார்சி பெண்கள் அக்யாரியில் நுழைவதற்கான பிரச்சனை
போன்ற வழக்குகளையும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் தென்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சோன் கோகோய் தெரிவித்தார் . இந்திய தலைமை நீதிபதிக்கு இத்தகியி அதிகாரம் உள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தில் முழு விசாரணைக்கு உட்படுத்தப் படாத ஒரு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது என்பது எளிதானது அல்ல. அதாவது பல்வேறு வழக்குகளை ஒன்றிணைத்தது ஒரு நீதிமன்ற உத்தரவை நீதி மன்றங்கள் பிறப்பிப்பது மிக அரிதானது.
1994ம் ஆண்டு இஸ்மாயில் ஃபாருக்கி வழக்கில், பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தை அரசு கையகப்படுத்தியதிற்கு எதிராக மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். மாறாக மசூதியில் தொழுகை செய்வது இஸ்லாத்தின் இன்றியமையாத நடைமுறையா என்று கேள்வி எழுப்பியது. மேலும் தொழுகை செய்வது இன்றியாமையாத நடைமுறை தான். ஆனால் அதற்காக மசூதி தான் செல்ல வேண்டும் என்றில்லை என தீர்ப்பு வழங்கியது. 2018ம் ஆண்டு இந்த தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சபரிமலை விவகாரத்தில் வழக்குகள் வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆனந்த மர்க்க வழிமுறையில் தாண்டவ நடனம் வேண்டாம் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம், ஆனந்த மார்க்கம் 1955ம் ஆண்டு தொடங்கப்பட்டு பலராலும் பின்பற்றப்பட்டது. 1966ம் ஆண்டு தாண்டவ நடனம் இந்த நம்பிக்கையில் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது. ஆனால் மார்க்கம் உருவான போது இந்த நடைமுறை இல்லை என்பதால், தாண்டவ நடனம் ஆனந்த மார்க்கத்தின் ஒரு இன்றியமையாத அம்சமாக ஏற்றுக் கொள்ள இயலாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு மதம் தோன்றிய பின்பு எந்தவிதமான பரிமாணமும் அடையாமல் அப்படியே உறைந்துவிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் வகையில் விசித்திரமான ஒரு வாதமாக அது அமைந்தது.
கேரள உயர் நீதிமன்றத்தில், இஸ்லாமிய காவல்துறையை சேர்ந்த ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் சில இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பதில்லை என்றும், அந்த அதிகாரி இதற்கு முந்தைய வருடங்களில் தாடி ஏதும் வளர்க்கவில்லை என்றும் கோரி நடைமுறையில் இருக்கும் ஆதாரங்களை காட்டி அவரின் மனுவை நிராகரித்துவிட்டது.ஆனால் கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் நடைமுறையில் இருந்த போதும் இந்த செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி அதற்கு தடை விதித்தது நீதிமன்றம்.
2014ம் ஆண்டு பட்டிஸ் சிரலா பஞ்சாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட இன மக்கள் நாக பஞ்சமி அன்று ராஜநாகத்தை உயிருடன் பிடித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மும்பை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கின் போது பொதுவான இந்து சாஸ்திரம் படி தீர்ப்பினை வழங்கியது. அம்மக்கள் தங்கள் பின்பற்றிய மத சாஸ்திரம் குறித்து மும்பை நீதிமன்றம் பெரிதும் ஆலோசிக்கவில்லை. ஐயப்பன் கோவில் விவகாரத்திலும் பொதுவான இந்து சாஸ்திரத்தை பின்பற்றி தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்துதல் தனி சமய சடங்கு என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை வழக்கோடு மற்ற மூன்று வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் என்று நவம்பர் மாதம் அமர்வு கூறியிருந்தது...
1. முஸ்லீம் பெண்கள் மசூதிகள் மற்றும் தர்காக்களில் நுழைவது :
2.தாவூதி போரா சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு சிதைவு வழக்கு:
3. பார்சி அல்லாதவர்களை மணந்த பார்சி பெண்கள் அக்யாரியில் நுழைவதற்கான பிரச்சனை
எனவே, தற்போதைய அமர்வு சபரிமலை வழக்கை தாண்டி, பொதுவாக பெண்களுக்கும் வழிபாட்டுத் தளங்களுக்கும இருக்கும் அடிப்படை சாரம்சம் என்ன? அரசியலமைப்பில் கூறப்படும் அடிப்படை உரிமை என்ன? மத உரிமைகளுக்கும் (artilce 25,36,29,30) vs பெண்களுக்கான அடிப்பை உரிமைகளுக்கும் (article 14,15(1)(3), 19, 21) உள்ள முரண்பாடு என்ன ? போன்ற பெரிய கேள்விகளை விசாரிக்க உள்ளது.
2018 சபரிமலை தீர்ப்பில் பெரும்பான்மையான கருத்து, வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொது இடங்களை அணுகுவதில் பெண்களுக்கு சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 50 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பின், நவம்பர் மாதம் ரஞ்சன் கோகோய் தலைமியிலான உச்ச நீதிமன்ற அமர்வு சபரிமலை கோயில் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரை செய்தது.
இன்று 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்றும், 5 நீதிபதிகள் எழுப்பிய கேள்வியை மட்டும் விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கலகத்தை சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்வதாக அதிமுக தலைமை அறிக்கை விடுத்துள்ளது.
கேரளாவின் எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு துணை ஆய்வாளர் வில்சன் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சிறப்பு துணை ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் ரூ.1 கோடி நிதியை வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
பிரதமர் உயர் தளங்களில் இருந்து கொண்டு அமைதியான பார்வையாளர்களிடம் குடியுரிமை திருத்தம் சட்ட தொடர்பாக பேசி வருகிறார். இது குறித்த எந்த கேள்விகளையும் அவர் எடுப்பதில்லை.பிரதமர் இந்த சட்டத்தை விமர்சிப்பவர்களிடம் பேசுவதில்லை. விமர்சகர்களுக்கு பிரதமரிடம் பேசவும் வாய்ப்பு இல்லை என்று ப.சிதம்பரம் தனது ட்விட்ட்ரில் கூறியுள்ளார்.
பிரதம மந்திரி தனது மிகவும் வெளிப்படையான விமர்சகர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையான கேள்வி/பதில் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் . இதுபோன்ற கலந்துரையாடலுக்கு பின், CAA குறித்து , இந்திய மக்கள் அவர்களின் முடிவுகளை எட்டட்டும்.
இந்த உரையாடலில் பிரதமர் சாதகமாக பதிலளிப்பார் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
கொல்கத்தா மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் பயணம் செய்த நரேந்திர மோடி, அங்குள்ள ராமகிருஷ்ண பேலூர் மடத்தில் உரையாற்றினார். அதில் குடியுறிமை திருத்தம் சட்டம் எந்த இந்தியர் ஒருவரின் குடியுரிமை பறிக்காது என்றும், மாறாக இந்தியாவில் வாழும் அகதிகளுக்கு குடியுரிமையைக் கொடுக்கும் என்றார்.
இந்த பேச்சு மடத்தில் இருக்கும் உறுப்பினர்கள் இடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது
. சில உறுப்பினர்கள் இந்த மடத்தில் ஏன் அரசியல் பேச அனுமதித்தீர்கள் என்ற மட நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ராமகிருஷ்ணா பேலூர் மடத்தில் பிரபஞ்சம் குறித்த கேள்விகள் மட்டும் தான் விவாதிக்கப் படவேண்டும், அரசியல் கேள்விகள் அல்ல என்றும கூறிள்ளனர் .