Tamil Nadu news today live updates: இன்று (ஜூன்.12) தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், முக்கிய தேசிய செய்திகள், உலகளாவிய முக்கிய செய்திகள், வானிலை அறிவிப்புகள், சினிமா அப்டேட்ஸ், விளையாட்டுச் செய்திகள் உள்ளிட்ட பல தரப்பிலான செய்திகளையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம்.
மேலும் படிக்க - Today weather updates: அரபிக்கடலில் உருவானது வாயு புயல்.. ஆனால் தமிழகத்திற்கு மழை இல்லை!
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழக முக்கிய செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடந்து முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் திடீரென கவர்னரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. இந்த சந்திப்பின் போது புதிய டிஜிபி நியமனம், புதிய தலைமை செயலாளர் நியமனம், ராஜிவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி, கவர்னரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கவர்னர் - முதல்வர் சந்திப்புக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் நடைபெற்ற சோதனையில்,இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிப்பு-என்.ஐ.ஏ. * தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல்-தீவிர விசாரணை
உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய ஸக்ரான் ஹசீனுடன் சமூக வலைதளம் தொடர்பு
சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் புகார் * தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது
2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு வரும் 24 முதல், ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் கணினி வழியிலான தேர்வு நடைபெறும் - தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில், 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸி. அணியில் அதிகபட்சமாக வார்னர் 107 ரன்களும், பின்ச் 82 ரன்களும் எடுத்தனர்.
மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது, இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார். அதற்கான வரைவு அறிக்கை அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்தார்கள். மும்மொழி கொள்கை கொண்டு வரும் முன்னர் திமுக கழக வரலாற்றை மத்திய அரசு பார்க்க வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், நிரவ் மோடிக்கு நான்காவது முறையாக ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்கினால், அவர் சரணடைய மாட்டார், ஆதாரங்களை அழித்துவிடுவார் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், அவரது ஜாமின் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்துள்ளது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னருடன் முதல்வர் விவாதித்ததாக கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு , தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, தனியார் பள்ளிகளை அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது; மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறேன் தேவையான உதவிகளை வழங்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்று பிரதமர் மோடி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The Central Government is closely monitoring the situation due to Cyclone Vayu in Gujarat and other parts of India.
I have been constantly in touch with State Governments.
NDRF and other agencies are working round the clock to provide all possible assistance.
— Narendra Modi (@narendramodi) 12 June 2019
ராஜராஜ சோழன் குறித்து, இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துகள் தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று உண்மைகளை தான் பேசினேன். என்னைப் போலவே பலரும் பேசினார்கள். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை(ஜூன்.13) விசாரணைக்கு வருகிறது.
ஜூலை 15-ம் தேதி விடியற்காலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். 3.8 டன் எடை கொண்டது சந்திரயான் 2 என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி குறித்த முழு தகவலை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Wait is over. #NerKondaPaarvaiTrailer will release today 6pm via @zeemusiccompany
#AjithKumar #HVinoth #BayViewProjects @ZeeStudios_@SureshChandraa @ShraddhaSrinath @thisisysr@nirav_dop @dhilipaction@nerkondapaarvai @zeemusicsouth
@ProRekha @DoneChannel1
@RangarajPandeyR pic.twitter.com/CIIRm2Xq2M— Komal Nahta (@KomalNahta) 12 June 2019
அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் எந்த ஊடங்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கக் கூடாது; மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தி தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "சிரித்தபடி எப்படி உள்ளே சென்றோமோ, அப்படி சிரித்தபடியே வெளியே வந்திருக்கிறோம்." என்றார். ஒற்றை தலைமை குறித்த கேள்விக்கு, 'தற்போது உள்ளபடியே செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்" என்றார்.
ஷிகர் தவான் காயம் காரணமாக இங்கிலாந்தில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ரிஷப் பாண்ட்டை உடனடியாக அணியில் வந்து இணையுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தவானின் உடற்தகுதியைப் பொறுத்து, ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், அவர் உடனடியாக இங்கிலாந்து விரைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. கூட்டத்தில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெறும் வெற்றியை பெற வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைக்கப்படாத எம்.எல்.ஏ. கலைச்செல்வன் அளித்த பேட்டியில், "ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம். ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது" என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக கழக பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை முதல்வர் பழனிசாமி பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது #ADMK pic.twitter.com/4wylyHCTc5
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 12 June 2019
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதால் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி கூறுகையில், "தற்போது அமமுகவில் இல்லை என்று கூறியபிறகும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. தலைமை குறித்து பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவு என்னவோ, அதுவே எனது விருப்பமும்" என்றார்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் இதுவரை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சருக்கு நெருங்கிய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் இதுவரை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சியினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இன்னும் சில நிமிடங்களில் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டம் நடைபெறும் அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 'அதிமுகவின் புதிய கழக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைக்கு விடுக்கப்படவில்லை.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய மூவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து பதிலளிக்குமாறு 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சி அணிந்து, கருப்பு கரியை முகத்தில் பூசிக் கொண்டு, அபிநந்தன் போல முறுக்கு மீசை வைத்து ஒருவர் டீ குடித்துக் கொண்டே 'Am sorry. I not supposed to tell this' என்று திரும்ப திரும்ப கூறுகிறார். பின்னர், டீ நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு டீ கப்புடன் செல்ல, அப்போது ஒருவர் கப்பை வைத்துவிட்டு செல்லுமாறு கூறுகிறார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாகவும், எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
Jazz TV advt on #CWC19 takes the Indo-Pak air duel to new level. It uses the air duel over Nowshera and Wing Co Abhinandan Varthaman's issue as a prop. @IAF_MCC @thetribunechd @SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/30v4H6MOpU
— Ajay Banerjee (@ajaynewsman) 11 June 2019
Today weather updates: கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலுடன் கூடிய வெப்ப காற்று வீசும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பம் குறைந்து மழை பெய்யும். முழு செய்தியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. அவர், உடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு நிர்வாகிகள் கூட்டம் தொடங்குகிறது. அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமையும், வலிமையான தலைமையும், சுயநலமற்ற தலைமையும் வேண்டும் என்று சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. முழு செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கோவை மாவட்டம் உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(National Investigation Agency) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு இருப்பதை அடுத்து அபு சித்திக், அசாரூதின் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், இதுகுறித்து சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். அதில், நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளது. ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் இது வராது. எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்று ரூபா கூறியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.இந்த நிலையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயமாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. தவானுக்கு பதில் ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால், உலகக் கோப்பையில் இருந்து தவான் விலகவில்லை எனவும், அவர் இங்கிலாந்திலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights