திரைப்பட நடிகர் சூர்யா (Actor Suriya), சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு சகோதரனும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர். அவரது சகோதரரான கார்த்தியும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ஆவர்.
சூர்யா சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொழிற்சாலை ஒன்றில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சூர்யா வேலை பார்த்தார். ஆறு மாதங்கள் பணியாற்றிய நிலையில், இயக்குனர் வசந்த் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்தார்.
மணிரத்னம் தயாரிப்பிலும், இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபிரண்ட்ஸ் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே ஆண்டில் வெளியான நந்தா படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருது கிடைத்திட முன்னணி நட்சத்திரமாக சூர்யா திகழ தொடங்கினார். அதன்பிறகு, தொடர்ச்சியாக சூர்யா நடிக்கும் படங்கள் வசூலை குவிக்க, ஹீரோக்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.
கதாயநாயனாக இல்லாமல் மன்மதன் அம்பு(2010), கோ(2011), அவன் இவன் (2011) போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.
2012இல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுதவிர, டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், மலபார் கோல்ட் போன்றவற்றின் விளம்பரத் தூதராக இருந்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை, சூர்யா திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.
‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ள சூர்யா, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருகிறார்.
சூர்யா ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2D தயாரிப்பு நிறுவனம் மூலம், 8க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளனர்.Read More
முன்னதாக, பாமகவின் சார்பில் அன்புமணி ராமதாஸ் எழுதியிருந்த கடிதம் – படத்திற்கு தவறான நோக்கம் கற்பிப்பதாக அமைந்திருந்தது. அதனை மறுத்திருப்பதுடன், சூர்யாவின் கடிதம் சமூக பொறுப்புள்ள சினிமா…
ஒரு மராத்தி படத்தின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதை அறிந்து படத்தின் தயாரிப்பாளருக்கு தானாக முன்வந்து ஒரு பெருந்தொகையை காப்பி ரைட்டாக கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம்…
சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் பற்றி விவரித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Soorarai Pottru: ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
நடிகர் சூரியாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா’ மாஸ் என்று ரசிகர்கள், நெட்டிசன்கள்…
அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை,…