அனிதா சம்பத்(Anitha sambath), செய்தி வாசிப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையும் ஆவார்.
இவர் 1992 ஜூன் 12 அன்று சென்னையில் பிறந்தார். பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகள் ஆவார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று திரைத்துறையில் பிரபலமானார். திரைத்துறையில் பிரபலமான இவர், காலா, காப்பான், 2.0, ஆதித்ய வர்மா, தர்பார், டேனி என பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிதா சம்பத் , பிரபா என்பவரை 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அனிதா கலந்துகொண்டார். அதில் கிடைத்த புகழை தொடர்ந்து, செய்தி வாசிப்பாளரில் இருந்து யூடியூப் பிரபலமாக மாறியுள்ளார். சொந்தமாக Anithasampath Vlogs என்கிற சேனலை தொடங்கிய அனிதா, அதில் வீடியோஸ் பதிவிட்டு வருகிறார். மேலும், சிறந்த நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.Read More
Producer Ravindhar Chandrasekaran on anitha sampath Bigg Boss Ultimate Tamil News: பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனிதா குறித்து பிரபல தயாரிப்பாளரும், பிக்பாஸ்…