தயாநிதி மாறன்(Dhayanithi maran), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் ஆவார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் வழிப் பேரன் ஆவார். இவரது சகோதரர் கலாநிதி மாறன், சன் நெட்வோர்க் குழுமத்தின் தலைவர் ஆவார்.
இவர் சென்னை, எழும்பூரிலுள்ள டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவின் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் “ஓனர்/பிரசிடென்ட் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்” படித்தார்.
2013 இல் தந்தை முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு அரசியலில் நுழைந்தார் தயாநிதிமாறன். 2004 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன், 62% வாக்குகள் பெற்று 1,34,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக 26 மே 2004ல் நியமிக்கப்பட்டார்.
தினகரன் நாளிதழ் அலுவலக தாக்குதல் காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது பதவியை 2007 இல் ராஜினாமா செய்தார்.
பின்னர், 2009 இல் மீண்டும் மத்திய சென்னை தொகுதியில் இருந்து திமுக சார்பில் மக்களவைக்கு தேர்வானார். அப்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராகத் பதவி வகித்தார்பின்னர், 2ஜி வழக்கில் சிக்கியதை தொடர்ந்து, தனது பதவியை ஜூலை 7, 2011 அன்று ராஜினாமா செய்தார்.
பின்னர், 2014இல் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதிமாறன் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியிலிருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.Read More
முரசொலி மாறனின் மகனும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், அர்ஜுனமூர்த்தி தனது தந்தை முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யான தகவல்…
தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் திமுக எம்.பிக்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தபின், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று…