எடப்பாடி கே.பழனிசாமி(Edappadi palanisamy), சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார். மே 12, 1954 அன்று கருப்ப கவுண்டர், தவசியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் மனைவி ராதா. இவர்களுக்கு மிதுன்குமார் என்ற மகனும் இருக்கிறார்
பள்ளிப்படிப்பை முடிந்ததும், ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல்துறையில் சேர்த்தார். ஆனால், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்ல வியாபாரம் செய்துவந்தார்.
பின்னர், அரசியல் களத்தில் என்ட்ரி கொடுத்தார். 1974-ல் கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி, 1990-ம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும், 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.
பின்னர் 2011-ல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2014-ம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும், தலைமை நிலைய செயலாளராகவும், 2016-ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017 இல் தமிழக முதல்வராக பதவியேற்றார். அதிமுகவின் கழக இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தை தொடர்ந்து, சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக உள்ளார்.Read More
Edappadi Palanisamy strongly condemns on AMMA MiniClinic closing across Tamil Nadu Tamil News: தமிழகம் முழுவதும் செயல்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள்…
Edappadi Constituency Round up: ‘இந்த தடவ ஒரு மாற்றம் வேணுமுங்க. திமுக வந்துச்சுனா நல்லா இருக்கும். தொகுதியில நீண்ட நாள் கோரிக்கையா சிப்காட் அமைக்கனும்’