Bitter Gourd Juice Recipe in tamil: காய்கறி வகையில் சத்துமிகுந்த காய்கறியாக பாகற்காய் உள்ளது. கசப்பு சுவையுடைய இந்த அற்புத காய்கறி ஏரளமான மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இவற்றை தங்கள் அன்றாட உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் மக்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை எளிதில் நீங்குகிறது.
பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறை மிக்ஸ் செய்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் ஆறு மாதம் பருகி வந்தால் மேற்கூறிய பிரச்சனை இருப்பவர்கள் சிறப்பான பலன்களை பெறலாம்.
பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் தினந்தோறும் பருகி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக உள்ளது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பாகற்காய் ஜூஸ் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
பாகற்காய் ஜூஸ் சிம்பிள் செய்முறை:
முதலில் பாகற்காயை கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த மருத்துவ குணமிக்க பாகற்காய் ஜூஸ் ரெடி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.