விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இதன் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைச் சேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (55), பொன்மேனியைச் சேர்ந்த பால சுப்பிரமணியன் (54), திருச்சி மொராய்சிட்டியில் வசித்து வரும் பிரபல ஹோட்டல் உரிமையாளர் டி.வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலைக்கரை வி.தியாகராஜன் (51), நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி (50), கோவிப்பட்டி கே.நாராயணசாமி (63), அருப்புக்கோட்டை எஸ். மணிவன்னன் (55), சிவகங்கை குமாரபட்டி அசோக் மேத்தா பஞ்சய் (43), தேவகோட்டை ராம்நகர் எம்.சார்லஸ் (50), தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள் (80) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என பல ஊர்களில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி வாதிடுகையில், ‘மனுதாரர்கள் 68 போலி கம்பெனிகள் நடத்தி பணம் வசூலித்துள்ளனர். 10,000 புகார்தாரர்கள் உள்ளனர். ரூ.5000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. 14 இடங்களில் சோதனையிடப்பட்டுள்ளது. 15 புகாரில் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விசாரணை, தொடக்க நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் ஜூம் மீட்டிங் நடத்தி யாரும் புகார் அளிக்கக்கூடாது. புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டியுள்ளனர். எனவே, மனுதாரர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். யார், யார் பெயரில் சொத்துக்கள் உள்ளன? எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன?
பினாமிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகி விடுவார்கள். இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்.
இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி , 10 பேரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களின் ஒருவரான திருச்சியை சேர்ந்த வீரசக்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டவர்.
பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
மதுரையில் இயங்கி வந்த நியோ மேக்ஸ் மற்றும் அதன் நான்கு கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமார்ந்த பொதுமக்கள், மதுரை சங்கரபாண்டியன் நகர், பார்க் டவுன் தபால்தந்தி நகர், விரிவாக்கம் மதுரை-17, என்ற முகவரியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணம் போட்ட மக்கள் உடனடியாக புகார் தெரிவித்தால், தாங்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
செய்தி: க. சண்முகவடிவேல்
Saturday, July 1, 2023
- English English
- தமிழ் தமிழ்
- বাংলা বাংলা
- മലയാളം മലയാളം
- ગુજરાતી ગુજરાતી
- हिंदी हिंदी
- मराठी मराठी
- Business Business
- बिज़नेस बिज़नेस
- Insurance Insurance
- Tamil News
- viral
- baffling optical illusion find animal in the picture
இந்தப் படத்தில் மறைந்து இருக்கும் மிருகம்: எத்தனை செகண்ட்ல கண்டு புடிச்சீங்க?
Optical illusion:இன்றைய ஆப்டிகல் இல்யூசன் சற்று குழப்பமானதாக இருக்கலாம். நன்கு உற்று கவனித்தால் வெற்றி உங்களுக்கு தான்.
Written by WebDesk
July 1, 2023 16:47 IST
Optical illusion
இன்றைக்கு உங்களுக்கான ஆப்டிகல் இல்யூசன் படம் வந்துவிட்டது. ஆப்டிகல் இல்யூசன் என்பது புதிர் போட்டி போன்றது. இதை விளையாடும் போது மூளை சுறுசுறுப்படைகிறது. ஆர்வத்தை தூண்டுகிறது. பாசிட்டிவ் எண்ணம் மற்றும் கண்களுக்கு வேலை அளிக்கிறது.
குடும்பத்தினர், உறவினர்களுடன் விளையாடும் போது உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூசன் சற்று குழப்பமானதாக இருக்கலாம். உங்கள் கண்களுக்கு வேலை. ஜிக்ஜாக் (zigzag) வரி படங்கள் மூளைக்கும், கண்களுக்கும் நல்ல வேலை கொடுக்கிறது. இது வெறும் கோடு என்ற நினைக்க வேண்டாம். இதில் ஒரு விலங்கு மறைந்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
ஆரம்பிக்கலாமா? படத்தை கவனமாக பாருங்கள். உங்கள் கண்களுக்கு வேலை கொடுங்கள். சரி இருங்கள். உங்கள் எண்ணம் புரிகிறது விலங்கை கண்டுபிடிக்க ஒரு க்ளு தருகிறோம். படத்தை மேலும் கீழும் ஸ்கோர்ல் செய்து பாருங்க.
கண்டுபிடிக்க முடியவில்லையா? பரவாயில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். இங்கே விடை கொடுக்கப்படுகிறது. லேப்டாப், மொபைலில் இந்த படத்தை பார்க்கிறீர்கள் என்றால் சற்று வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பாருங்கள். கீழ் இருந்து மெதுவாக மேல் நோக்கி பார்க்கும் போது, Harambe (கொரில்லா) விலங்கு தெரியும்.
I promise upvoting makes you see the hidden image better.
by u/YeahChristopher in opticalillusions
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.