ஏ.ஜி. பேரறிவாளன் (A. G. Perarivalan) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். 1991 ஜூன் 11 அன்று சென்னை பெரியார் திடலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ராஜீவ் படுகொலைக்கு சிறிய ரக 9 வால்ட் பாட்டரிகள் வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டப்பட்டது. பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. பின்னர் அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 2014 பிப்ரவரி 18 தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. பிப்ரவரி 19, 2014 அன்று, அவருடன் கைதான மேலும் ஆறு குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மத்திய அரசு, ஆளுனர் என பேரறிவாளன் விடுதலையை இழுத்தடிக்க, 15 மார்ச் 2022 அன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து, 2022 மே 18 அன்று, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவித்தது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு, பேரறிவாளன் விடுதலையானார்.Read More
ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…
பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…
பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது…
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து…
மாநில அரசு வெகுநாட்களுக்கு முன்பே முடிவெடுத்த நிலையிலும் ஏன் அவர் இவ்வாறு செய்கிறார்? இது தொடர்பாக முடிவை ஆளுநர் தான் எடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக பரோலில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சந்தித்ததை விவரிக்கிறார்.