தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் (Actor Ajith) “தல”, “அல்டிமேட் ஸ்டார்”, “AK” என்ற பெயர்களில் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் சினிமாவுக்குள் வந்த அஜித், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அஜித் குமார், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான “ஷாலினி” என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.
இவர் சினிமாவை தொடர்ந்து தனது வாழ்வில் பல துறைகளில் பங்களித்து பணியாற்றி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு அஜித் நற்பணி மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். அதேபோல், 2021 டிசம்பர் 1 ஆம் தேதி, இனிமேல் யாரும் என்னை தல என பட்டப்பெயர் உபயோகித்து அழைக்க வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
பல நற்பணிகளை செய்யும் அஜித், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டதால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும், திரைப்படங்களில் தொடர்ந்து சாகச காட்சிகள் டூப் இன்றி நடித்து வருகிறார்.
இதுவரை 60 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் அஜித்தின் திரைப்பயணம், எண்ட் கார்டு இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.Read More
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும்,இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது
தென்னிந்தியாவில் திரைப்பட நட்சத்திரங்களுக்கான உச்சக்கட்ட கொண்டாட்டங்கள் மரணத்திற்கு வழிவகுத்தாலும் இன்னும் கொண்டாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியானது.
படங்களும் தமிழகத்தில் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானது, ஆனால் வாரிசு படம் தெலுங்கு மாநிலங்களில் மூன்று நாட்கள் (ஜனவரி 14) தாமதமாதமாக வெளியாக உள்ளது.