பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya rai), 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2007இல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளர் ஆவர்.
தொடர்ந்து, ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் ராய் பயின்றார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கும் ஆராத்யா என்கிற மகள் உள்ளார்.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா, இருவர் படத்தை தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது, மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு “பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்!” என்று ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை…
இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரினார். மூன்றாவது சம்மனுக்கு…
நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஐஸ்வர்யா ராயின் கணவர்…