திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ,2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைதுறையில் அறிமுகமானார். இவரது தந்தை ராஜேஷ் 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்-வும் நடிகர் ஆவர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி. ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தனது கலைப்பயணத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கினார். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி வெற்றிபெற்றார்.
தொடர்ந்து, அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அசாத்திய நடிப்பால் இதுவரை நான்கு SIIMA விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது, ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
2021இல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அனுராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கனா படத்தின் ஒத்தையடி பாதையில பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. கனா படம் பாடல்கள்:…