
அரசியலமைப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படி குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினாலன்றி எச்சிக்கலான சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எவ்வதிகாரமும் கிடையாது.
இசைவு பெறாதது உண்மை என்றே கொள்வோம். நுழைவுக் கட்டணம் பெற்ற அரசு, மலையேற்ற இசைவு, தீக்காப்பு ஏற்பாடு முதலியன குறித்து அறியாதது தவறுதானே!
ஆறு மாதக் காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆகாவிட்டால்? அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம்.
திட்டமிட்டுத் திமிராக, அமைதியைச் சிதைக்கும் வகையிலும், வெறித்தனங்களைத் தூண்டும் வகையிலும் நடந்து கொள்ளும் இராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர், அதிமுக என்னும் கப்பலை மூழ்காமல் காப்பாற்றும் மீகாமனாக – கப்பலோட்டியாக மாற வேண்டும். ஒற்றுமை என்னும் தேரைச் செலுத்தும் தேரோட்டியாக விளங்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி பாசக ஆதரவால்தான் அதிகாரத்தில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனாலும் தன்னுடைய திறமையாலும் துணிவாலும்தான் தன் பதவியைக் காத்து வருகிறார்.
மேடையில் ஒற்றை நாற்காலியில் அவர்மட்டும் அமர்ந்து கூட்டத்தை நடத்துகிறார். இதனால் ‘ஆண் செயலலிதா’ என்னும் அவப்பெயரைத்தான் சம்பாதித்து வருகிறார்.
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் – தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் – தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.
மடங்களில் ஒழுக்கக்கேடும் கொலையும் நடக்கின்றன என்றால் காரணம் என்ன? கருவறையிலேயே தேவநாதன் போன்றோர் பெண்களைச் சிதைக்கின்றனர் என்றால் காரணம் என்ன?
தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை.
பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா?