Anand Mahindra

ஆனந்த் கோபால் மகிந்திரா (Anand Mahindra), இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மகிந்திரா குழுமத்தின் தலைவருமாவார். இவர் மகிந்திரா அண்டு மகிந்திராவின் இணை நிறுவனர் ஜகதீஷ் சந்திர மகிந்திராவின் பேரன் ஆவார்

1955 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மும்பையில் மறைந்த தொழிலதிபர் ஹரிஷ் மகிந்திரா, இந்திரா மகிந்திரா ஆகியோருக்கு பிறந்தார் ஆனந்த் மகிந்திரா. இவருக்கு அனுஜா சர்மா, ராதிகா நாத் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். லாரன்ஸ் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரித்தல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றைப் பயின்றார். பின்னர், 1981 இல், ஆர்வர்டு வர்த்தகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை படிப்பை நிறைவு செய்தார்.

1996 ஆம் ஆண்டில், இந்தியாவில் நலிந்த சிறுமிகளுக்கு கல்வியை ஆதரிக்கும் நன்ஹி காளி என்ற ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவினார்.

ஆனந்த், பத்திரிக்கையாளர் அனுராதாவை திருமணம் செய்துகொண்டார். இவரது மனைவி வெர்வ் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவர் தற்போது வெர்வ் மற்றும் மேன்ஸ் வேர்ல்ட் பத்திரிகைகளின் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு திவ்யா, ஆலிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகிந்திரா, பல உள்ளூர் சாதனையாளர்களின் படைப்புகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி வருகிறார்.
Read More

Anand Mahindra News

best-selling Mahindra vehicles in November 2022
Alturas G4 உற்பத்தியை நிறுத்திய மஹிந்திரா.. பரபரப்பு அறிக்கை

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஸ்கார்பியோ-N கார்களை திரும்ப பெறும் மஹிந்திரா.. காரணம் இதுதான்!

கார் சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.

என்னா டைவ்… ஆனந்த் மகேந்திராவை கவர்ந்த திருநெல்வேலி சிறுவன்

ஆனந்த் மஹிந்திரா திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சாலையில் அக்ரோபாட்டிக் திறமையைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

அன்னையர் தினத்தன்று 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

அன்னையர் தினத்தன்று, இட்லி அம்மாவுக்கு பரிசளிக்க, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக ஆனந்த் மஹிந்திரா தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை ஓவியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை குறிப்பிட்டு ட்வீட்

சென்னையில் 20 வயது ஓவியரிடம் தனது உருவத்தை வரைய ஆசைப்படும் ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை மேற்கோள் காட்டி பாராட்டு

’போடா டேய்’ – நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை; ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் வைரல்

போடா டேய் என்பதும் தான் நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

பொலிரோ காரை வச்சுக்கிட்டு அந்த குட்டி ஜீப் தரீங்களா… வில்லேஜ் விஞ்ஞானியால் வியந்த ஆனந்த் மஹிந்திரா

இந்த வாகனத்தில் கியர், கிளட்ச், பிரேக்குகள் மற்றும் காரின் பிற பாகங்கள் உள்ளன. இதற்கு வெறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தான் ஆகியுள்ளது. ஆனால்,…

ஆட்டோவில் வீடு கட்டிய அசகாயசூரன்; சென்னை இளைஞரைத் தேடும் ஆனந்த் மஹிந்த்ரா

ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில்…

‘தோனி கற்றுக் கொடுத்த 3 வாழ்க்கைப் பாடங்கள்’ – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

தோனியின் ஹேர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, டிவியில் என் அம்மா அவரை சுட்டிக்காட்டியபோது தான் நான் அவரை கவனித்தேன்

ஐஸ் கிரீம் தோசை; இது என்னங்க புது கண்டுபிடிப்பா இருக்கு!

பெங்களூருவில் தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் கொடுப்பது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் தோசையுடன் சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி என்று ஐஸ்கிரீம் காம்பினேஷன் எனும்போது சட்னி காய்கறி சாம்பார்…

ஆனந்த் மஹிந்திரா டுவிட்: பியூர் வெஜ் ஹோட்டல்; வெஜ் மீன் வறுவல், வெஜ் மட்டன் தோசை, வெஜ் சிக்கன் ரைஸ்!

மஹிந்திரா குழும நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்துள்ள ஒரு உணவகத்தின் பியூர் வெஜிடேரியன் உணவுப் பட்டியல் பலகை புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி…

தமிழ் மொழியை படிக்காததற்காக வெட்கப்படுகிறேன் – தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா

Anand Mahindra : உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியை படிக்காததற்காக வெட்கப்படுவதாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி…. ஆனந்த் மஹிந்திராவின் ஒரேயொரு ட்வீட் – குவிந்த உதவிகள்

கோவை பாரத் கேஸுக்கு நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, “நான் தொடர்ந்து கமலாத்தாளுக்கு சிலிண்டர் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

“வேலைக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் சல்யூட்”- ட்விட்டரில் உருகிய ஆனந்த் மஹிந்திரா

இந்த புகைப்படம் மட்டுமல்ல அதிலுள்ள கருத்தும் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்திய ஃபேஸ்புக்கைத் தொடங்க தயாரா? ஆரம்ப முதலீடு ரெடி!

சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பேசி மாய்வது – மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த விதிமீறல் குறித்துதான்.