ஆண்ட்ரியா ஜெறேமியா(Andrea Jeremiah), பிண்ணனிப் பாடகியும், நடிகையும் ஆவார். இவர் 21 டிசம்பர் 1984 அன்று சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தார். நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். மேலும், The Show Must Go On-TSMGO Productions என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, 20க்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடியுள்ளார். அன்று முதல் திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.Read More
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய…