Andrea Jeremiah

ஆண்ட்ரியா ஜெறேமியா(Andrea Jeremiah), பிண்ணனிப் பாடகியும், நடிகையும் ஆவார். இவர் 21 டிசம்பர் 1984 அன்று சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தார். நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். மேலும், The Show Must Go On-TSMGO Productions என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, 20க்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடியுள்ளார். அன்று முதல் திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.
Read More

Andrea Jeremiah News

ஆண்ட்ரியா பிரிவுக்கு காரணம் இதுதான்… சஸ்பென்ஸ் உடைத்த அனிருத்!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத் கூடவே சர்ச்சைகளையும் தனக்கு பின்னால் அழைத்து வந்துள்ளார்.

இது தப்பே இல்லையாம்… கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா புகைப்படம்!

ஆன்ட்ரியா கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

5 இயக்குநர்கள் பல முன்னணி நடிகர்கள்: கிளாஸியான புத்தம் புது காலை ட்ரைலர்!

அமேசான் ப்ரைமில் வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலரை, இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்வீட் கேக்… செம க்யூட் டான்ஸ்! ஆன்ட்ரியா- ஐஸ்வர்யா ராஜேஷ் லூட்டி

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Andrea Jeremiah Photos