Annamalai

தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி – பரமேஸ்வர் தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாமலை (Annamalai). கோவையில் என்ஜினீயரிங் படித்த அவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து, கர்நாடகாவின் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்ந்தார். போதை பொருள் விற்பனை செய்பவரை பிடித்தல், இரவு பைக்கில் ரோந்து பணி என அதிரடி நடவடிக்கைகளால் அவரை அம்மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு அண்ணாமலை டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2019இல் மக்கள் பணியாற்ற காவல் துறை பணியிலிருந்து விலகினார்.

ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை உருவாக்கி, சமூக பணிகளையும், இயற்கை விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

பின்னர் 2020 இல், தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவின் விசுவாசியாக பல அறிக்கைகளையும் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக சென்றதையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலை கைவசம் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Read More

Annamalai News

For Battle Karnataka BJP looks at UP Gujarat wins Tamil Nadu star picks Pradhan Mandaviya Annamalai
கர்நாடக தேர்தல்: மேலிட பொறுப்பாளர்களாக பிரதான், அண்ணாமலை நியமனம் ஏன்?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரதான், மாண்டவியா மற்றும் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க உள்கட்சி பிரச்சனையில் பா.ஜ.க தலையீடு செய்ததா? அண்ணாமலை விளக்கம்

“பாஜகவினுடைய அதிகாரபூர்வ நிலைப்பாடு என்பது எந்த நிலையிலும் மாறாதது” – அண்ணாமலை விளக்கம்

தி.மு.க தீய சக்தி; இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைய நேரில் வற்புறுத்தினோம்: அண்ணாமலை, சி.டி ரவி பேட்டி

தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த…

முதலில் இ.பி.எஸ்; அடுத்து ஓ.பி.எஸ்: நேரில் சந்தித்த அண்ணாமலை பேசியது என்ன?

எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் இமேஜ் 6 மாதங்களில் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை பேட்டி

இந்த இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

பா.ஜ.க.வில் இருந்து 5 பேர் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை

பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதாக 5 நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குக்கு பணம்… அமைச்சர்கள் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உரையாடல் வீடியோ… அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர் கே.என். நேருவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி விவாதித்ததாக வீடியோ…

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க போட்டி உறுதி: 31-ம் தேதி வேட்பாளர் அறிவிக்க திட்டம்

மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை சின்னத்திற்கு வாக்கு கேட்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது

அண்ணாமலை பற்றி பேச்சு: காயத்ரி ரகுராம்- கோவை சரஸ்வதி ஆடியோ லீக்

அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் உடன் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், போனில் பா.ஜ.க அண்ணாமலையைப் பற்றி பேசிய ஆடியோ லீக் ஆகி…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் மோடி ஆட்சிக்கான பலப்பரீட்சை இல்லை: அண்ணாமலை

ஈரோட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு புதிய டி.வி: அண்ணாமலை நடை பயணத்திற்கு முன்பு தொடங்க தீவிரம்

கேரளாவில் பா.ஜ.க-வின் தொலைக்காட்சியாகக் கருதப்படும் ஜனம் டிவியின் நீட்டிப்பாக, தமிழில் செய்தித் தொலைக்காட்சி தொடங்க தமிழக பா.ஜ.க திட்டமிட்டுளது. பா.ஜ.க தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும்…

ஈரோடு கிழக்கில் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவு? அண்ணாமலை சூசக பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; பா.ஜ.க போட்டியில்லை; எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு; அண்ணாமலை சூசக தகவல்

ஆளுநரை ஒருமையில் பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க செயற்குழு தீர்மானம்

கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெரியாமல் கை பட்டு விமானத்தில் எமர்ஜென்சி கதவு திறக்குமா? அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணம்: அண்ணாமலை அறிவிப்பு

திருச்செந்தூரில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எமர்ஜன்சி கதவு திறப்பு; இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன? அண்ணாமலை விளக்கம்

தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க தனித்துப் போட்டியா? 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழுவை அறிவித்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

இண்டிகோ விமான சம்பவம்; பயணிகள் பாதுகாப்பில் சமரசமா? தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பா.ஜ.க யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு…

அண்ணாமலையுடன் பயணித்த தேஜஸ்வி சூர்யா விமான கதவை திறந்தது எப்படி? இண்டிகோ அறிக்கை

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் பயணம் செய்தவர் சூர்யாதான் என்றும் விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

ஆளுனர் ஆர்.என். ரவியின் தமிழ்நாடு பெயர் மாற்ற கருத்து தேவை இல்லாதது: அண்ணாமலை

ஆளுனரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு சின்னம் இருந்திருக்க வேண்டும் என்ற அண்ணாமலை. “ஆளுனர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதால் நான் அதை ஒரு எழுத்தர் பிழையாகப் பார்க்கிறேன்.”…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.