Annamalai

தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி – பரமேஸ்வர் தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாமலை (Annamalai). கோவையில் என்ஜினீயரிங் படித்த அவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து, கர்நாடகாவின் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்ந்தார். போதை பொருள் விற்பனை செய்பவரை பிடித்தல், இரவு பைக்கில் ரோந்து பணி என அதிரடி நடவடிக்கைகளால் அவரை அம்மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு அண்ணாமலை டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2019இல் மக்கள் பணியாற்ற காவல் துறை பணியிலிருந்து விலகினார்.

ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை உருவாக்கி, சமூக பணிகளையும், இயற்கை விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

பின்னர் 2020 இல், தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவின் விசுவாசியாக பல அறிக்கைகளையும் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக சென்றதையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலை கைவசம் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Read More

Annamalai News

ஆதார் இணைப்பு பின்னணியே இதுதான்… ஓசை இல்லாமல் இன்னொரு கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்

பொது பயன்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில், இந்தியாவிலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும், தமிழக அரசு அதை மறைப்பதற்காக, ஆதார் அட்டை என்ற புதிய சர்ச்சையை அவரவசரமாக…

சென்னை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை கூட்டம்; அண்ணாமலை பங்கேற்பு

சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.

அண்ணாமலை தலைவரான முதல் நாளில் இருந்தே என்னை வெளியேற்ற விரும்பினார்’: காயத்ரி ரகுராம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை.

பா.ஜ.க பெண் நிர்வாகியிடம் ஆபாச பேச்சு: திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

பா.ஜ.க பெண் நிர்வாகியிடம் திருச்சி சூர்யா சிவா ஆபாச பேச்சு; கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உத்தரவு

மோடியுடன் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் சந்திப்பு; இதில் அரசியல் இல்லை: அண்ணாமலை பேட்டி

தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணியை தொடர்வோம் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

2024 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி – அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய வலுவான கட்சிகளில் அதிமுக உள்ளது. கூட்டணி குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறினார்.

பால் விலை உயர்வை கண்டித்து 1500 ஒன்றியங்களில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : அண்ணாமலை அறிவிப்பு

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்திய நிலையில், அதிக கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு பாக்கெட் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையின் அமைதியை சீர்குலைக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்; திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை கார் வெடிப்பு: அவசரப்பட்ட அண்ணாமலை… பின்வாங்கினாரா?

தமிழ்நாடு பா.ஜ.க-வின் இளம் தலைவரும், தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியுமான இவர், அடிப்படையின்றிக் கேள்விகளை முன்வைத்ததற்காக காவல்துறையின் விமரசனங்களைப் பெற்றுள்ளார்.

அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா? அண்ணாமலை அறிக்கை

பா.ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா?…

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி : செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை.

பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்… வேண்டுகோள் விடுத்த காவல்துறை… அண்ணாமலை பதில் என்ன?

வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி விசாரணையை திசைதிருப்ப…

கோவையில் முழு அடைப்புக்கு அண்ணாமலை அழைக்கவில்லை; ஐகோர்ட்டில் தகவல்

கோவையில் அக்டோபர் 31ம் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்று கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுத்த நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முழு அடைப்புக்கு…

பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சனம் செய்வதா? அண்ணாமலைக்கு தலைவர்கள் கண்டனம்

பா.ஜ.க தலைவர் அண்ணமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க.…

‘சாராய அமைச்சர்; ஆடு அல்ல குள்ளநரி..!’ எல்லை தாண்டும் செந்தில் பாலாஜி- அண்ணாமலை மோதல்

தீபாவளி பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொகை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர்…

கைதானவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யாதது ஏன்? கோவை சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி

கோவை மாருதி கார் வெடித்து சிதறிய வழக்கில்,தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கார் தீ விபத்து: பல சந்தேகங்களை எழுப்புகிறது – அண்ணாமலை

பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணமலை, கோவை கார் கேஸ் சிலிண்ட வெடி விபத்து பல சந்தேகங்களை எழுப்புகிறது, கோவை மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்று…

தமிழகம் வந்த வேகத்தில் டெல்லி திரும்பும் மத்திய அமைச்சர்கள்.. பா.ஜ.க அரசியல் எடுபடுமா?

அடுத்தடுத்த தினங்களில் 50 மத்திய அமைச்சர்கள் வரபோகிறார்கள் என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை.

பிரதமர் உத்தரவு… 30 நாட்களுக்குள் 76 மத்திய அமைச்சர்களும் தமிழகம் வருவார்கள் – அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை கண்காணிக்க 76 அமைச்சர்களும் ஒரு மாதத்திற்குள் தமிழகம் வருவார்கள் – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.