
இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா? என நினைக்க வைக்கும் கதை இது. மனநலம் சம்பந்தப்பட்ட கதையை இவ்வளவு எளிமையாக முடியுமா என்பதே ஆச்சரியம்தான்.
மிக உயர்ந்த தத்துவத்தை ஒரு மது கோப்பையை வைத்து, எல்லா காலத்துக்கும் ஏற்றார் போல், கதையாக சொல்வது அரவிந்த் குமாரால் மட்டுமே முடியும்.
தினம் தினம் நாம் சந்திக்கும் சாதாரண மக்களின் நிலையை அருமையாக விவரித்திருக்கிறார், அரவிந்த் குமார்.
இது நடிகை வடிவுக்கரசியின் கதையல்ல. சிக்கனமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணின் கதை இது. சிக்கனமாக வாழ நினைத்தாலும் கஞ்சம் இல்லை வடிவுக்கரசி.
தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நபரின் உள்ளத்தில் என்னவிதமான எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பதை மிக தெளிவாக விவரித்திருக்கிறார். அரவிந்த் குமார்.
சிலப்பதிகாரத்தில் கோவலன் கொல்லப்பட யார் காரணமாக இருந்திருப்பார் என்பதை தன்னுடைய அபார கற்பனை சக்தியால் விவரிக்கிறார், ஆசிரியர்.
தவிமிருந்து பெற்ற குழந்தையை, தவறாக நினைத்து அப்பா திட்டியதால், அந்த குழந்தை எங்கிருந்து உதயமானதோ அங்கேயே தன்னை மாய்த்துக் கொண்டது என்பதை விவரிக்கிறது.
நடிகை மஞ்சு வாரியருக்கும் கதையின் நாயகி செளதாமினிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தாயையும் தந்தையையும் இழந்தாலும் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும், மூன்று இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை, உணர்ச்சி பூர்வமாக விவரிக்கிறது.
மீனவ பெண்களில் வருத்தச்சி என்று சிலர் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வருத்தச்சி யார்? கதையின் மூலம் சொல்கிறார், அரவிந்த்குமார்
ஜாதியம் எந்த விசாரணையும் இல்லாமல் தன்னைவிட தாழ்ந்த சமூகம் மீது எந்த பழியையும் போடும் என்பதை ‘வளையல்’ கதையின் மூலம் விவரித்திருக்கிறார், அரவிந்த்குமார்.
தொலைந்து போன நண்பனின் நினைவுகளை அசை போடுவது என்பது தனி சுகம். அவர்கள் தொலைந்து போனதில் உள்ள கதைகள் படுசுவராஸ்யம் என்பதை உறுதி செய்கிறது, ஹவில்தா குப்புசாமி.
வட சென்னையில் துறைமுகம் பகுதியில் நடந்த கொலைகள், அதன் பின்னணியையும், துரோகம் எவ்வளவு எளிதாக நடக்கிறது என்பதையும் விளக்குகிறது.
அரவிந்த் குமார் சங்கர் விஷயத்தை சொன்னதில் இருந்து அதனை நம்பவும் முடியாமல், நம்பாலும் இருக்க முடியாமல் கலைத்துப் போட்ட மாதிரி எண்ணங்கள் மனதை குழம்ப செய்தது. கையில்…
சென்னையின் பூர்வ குடி மக்களான மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், பழக்க வழக்கம் என இதுவரை பதிவு செய்யப்பட்டாத பார்வையில் உருவான கதைதான் தேசம்மா.