ஆசிய நாடுகள் இடையே ஒற்றுமை, தோழமையை ஏற்படுத்தும் வகையில் இந்தியாதான் முதன் முதலில் 1951ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. அதன்பின்னர், இந்தியா 1982-ம் ஆண்டு மீண்டும் இந்த போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகள் ‘ஆசியாட்’ (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள், ஆசியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் கடந்த ஆக.17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 2ம் தேதியோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது. போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்களாக பிகின் பறவை, அட்டுங் மான், காண்டாமிருகம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தான் ஒவ்வொரு முறையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் வருவதற்கே கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. நடப்புத் தொடரில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.Read More
Former Pakistan captain Wasim Akram revealed about 1986, Austral-Asia Cup Tamil News: இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில், பாகிஸ்தான் டக்-அவுட்டில் இருந்த வீரர்கள்…
ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பரிசோதனையில் தெரியவந்ததைத் அடுத்து, அவர் 4 ஆண்டுகளுக்கு எந்த போட்டியிலும் கலந்துகொள்ள…
ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 11-வது தங்கம் இது!