தமிழ்நாடு அரசியல்வாதிகளில் ஒருவரான ஜெயக்குமார் (D Jayakumar), அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவர். பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்பை முடித்த ஜெயக்குமார், மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார்.
1991இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு,ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2006இல் மீண்டும் ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானார். இதையடுத்து, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில் இருந்து தேர்வானார். அதே ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர், தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சரானார்.
1991 முதல் வனத்துறை, மீன்வளம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் நிதித் துறை என பல்வேறு அமைச்சரவை பதவிகளில் பணியாற்றினார். ஆனால், 2021 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் மூர்த்தியிடம் தோல்வியை தழுவினார். வர் 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஐந்து முறை ராயபுரத்தில் வெற்றிவாகை சூடியிருந்தார்.
2022இல் உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்திய வழக்கில், ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். Read More
‘தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்’ என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை ஏற்கிறோம் என்றும் தி.மு.க நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று…
இ.பி.எஸ் ஆதரவாளராக பார்க்கப்படுகிற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தப்பு மேல தப்பு செய்கிறார் என்றும் அவர் தவறான பாதையில் செல்கிறார் என்றும் விமர்சித்து கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இடையே ஒற்றைத் தலைமைக்காக பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதனால், அனைத்து ஊடகங்களின் காமிராக் கண்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில்…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒற்றைத் தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில், திருமண மண்டபத்தில், லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவர் பலியான சம்பவத்தில், திருமண மண்டப உரிமையாளர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா உள்ளிட்ட 4 பேர்…
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய…
தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார்…
ஒரு சிடியை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்திளார்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:…