நடிகர் ஜெயம் ரவி, மதுரையில் 1980-ஆம் ஆண்டு வெட்டறான் திரைப்பட தொகுப்பாளர் மோகன், வரலட்சுமி மோகன் தம்பதிக்கு மகனாக பிறந்துள்ளார். இவருக்கு ராஜா என்னும் தமயனும், ரோஜா என்ற சகோதரியும் உள்ளனர்.
சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்துள்ள இவர், சென்னை லொயோலா கல்லூரியில் இளங்கலை பட்டத்தினை பயின்றார்.
2001இல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சிறுவயதிலே பாவ பாவமரிடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
இவரின் அண்ணன் இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகமாக நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற, ஜெயம் ரவி என்று தமிழகத்தில் பிரபலமானார். பின்னர், அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவராவார்.
2004-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை எம் குமரன் திரைப்படத்திற்காக பெற்றார். சீமா, எடிசன், விகடன், பிலிம்பேர் என பல விருதுகளை வென்றுள்ளார். தொடர்ந்து இவர் பல படங்களை நடித்து தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் என்கிற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், எழுத்தாளர் ஜெயமோகன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர்கள் ஜெயம் ரவி,…
Comali Review, Comali Audience Response: ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் கோமாளி படத்திற்கு முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன
இதில் பெரிய கோமாளித்தனம் என்னவெனில், 2016ல் ரஜினி அந்த டயலாக்கை சொல்வது போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தான். அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்தது 2017…
சிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று ரிலீஸானது. சிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் படம் வெளியாவதற்கு இன்று காலையில் பிரச்சனை ஏற்பட்டது.…