மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின்(MK Stalin). இவரின் மனைவி துர்கா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள்.
சென்னை சேத்துப்பட்டிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த அவர், விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.தொடர்ந்து, `முரசே முழங்கு’, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான்’, `நாளை நமதே என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து, திரைத்துறையில் களமிறங்கிய ஸ்டாலின், ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், `குறிஞ்சி மலர்’ என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.
1968இல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்த அவர், சென்னை 75-வது வட்ட தி.மு.க-வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1973இல் தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினர், 1976இல் மிசா சட்டத்தின் கீழ் கைதாகி ஓராண்டுகாலம் சிறையிலும் இருந்தார். 1980இல் தி.மு.க-வின் இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராகவும், 1983இல் தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார்.
2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 2008இல் தி.மு.க-வின் பொருளாளராகவும், 2009இல் தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2016இல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 2017இல் அக்கட்சியின் செயல் தலைவரானாகவும் ஆனார். 2018 கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்று, முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். Read More
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட 33%க்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள பயிர்சேதத்திற்கு, ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்று, கேள்வி பதில் வடிவில் வீடியோ வெளியிடுள்ளார். அதில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்படி மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம்…
மு.க. ஸ்டாலின் மேல்சட்டை இல்லாமல் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 69 வயதிலும் ஃபிடனஸ் உடன் இருக்கும் ஸ்டாலின்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு…
கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக் காட்டிய நாளாக…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு…