மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின்(MK Stalin). இவரின் மனைவி துர்கா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள்.
சென்னை சேத்துப்பட்டிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த அவர், விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.தொடர்ந்து, `முரசே முழங்கு’, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான்’, `நாளை நமதே என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து, திரைத்துறையில் களமிறங்கிய ஸ்டாலின், ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், `குறிஞ்சி மலர்’ என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.
1968இல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்த அவர், சென்னை 75-வது வட்ட தி.மு.க-வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1973இல் தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினர், 1976இல் மிசா சட்டத்தின் கீழ் கைதாகி ஓராண்டுகாலம் சிறையிலும் இருந்தார். 1980இல் தி.மு.க-வின் இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராகவும், 1983இல் தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார்.
2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 2008இல் தி.மு.க-வின் பொருளாளராகவும், 2009இல் தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2016இல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 2017இல் அக்கட்சியின் செயல் தலைவரானாகவும் ஆனார். 2018 கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்று, முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். Read More
தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023 மண் ஆரோக்கியம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் தன்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும்…
சாணார் கிளர்ச்சி என்ற தோள் சீலைப் போராட்டம் அதற்கு பின்னர் ஏற்பட்ட வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டும் சமூகத்தில் சாதிக்கு எதிரான மாற்றத்தை கொண்டுவந்தன. தொடர்ந்து, கம்யூனிச,…
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச்…
சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் காவலர்களுடன் உரையாடி குறைகளை கேட்டு அறிந்து குழு படம் எடுத்து மகளிர் தினத்தை கொண்டாடினார்.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சந்தித்து பாதுகாப்பை…
வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் குறித்த பொய்யான செய்திகள் பரப்பியது தொடர்பாக பாஜக தலைவர், 2 பத்திரிகையாளர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கவும் தமிழ்நாடு…
‘திராவிட மாதிரி’ பயிலரங்கில் ஆ. ராசா தனது உரையின் போது, பி ஆர் அம்பேத்கரின் கனவுகளை ‘ஆரிய மாதிரி’ தோற்கடித்ததாகவும், ஆனால் தமிழ்நாட்டின் ‘திராவிட மாதிரி’ அவற்றை…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார் என்று…