Live Now Live Now

News in Tamil Updates: ‘பாஜக நிச்சயம் தமிழகத்திலும் கொடி ஏற்றும்’ – பிரதமர் மோடி உறுதி

News in Tamil Live: லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்

By: Jun 10, 2019, 12:22:51 PM

News in Tamil Updates: இன்று(ஜூன்.9) நாட்டின் அரசியல், பொருளாதாரம், வானிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் உங்கள் ஐஇ தமிழ் தளத்தில் இதோ,

மேலும் படிக்க – இபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி

உலகக் கோப்பை தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தமிழில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Tamilnadu Latest News Live: விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் – அமைச்சர் ஜெயக்குமார்!

Live Blog
Latest News in Tamil : உலகமெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் செய்திகள் உடனுக்குடன் உங்கள் கையில்
23:06 (IST)09 Jun 2019
ரபேல் நடால் சாம்பியன்...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.

இறுதிப்போட்டியில் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தைமை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

22:02 (IST)09 Jun 2019
கடைசி தமிழன் இருக்கும் வரை...

கருணாநிதியின் நீட்சியான ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியை தருவார் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதி வாழ்வார்; நினைக்கப்படுவார் என்றும் புகழ்ந்துள்ளார்.

20:06 (IST)09 Jun 2019
ஏழுமலையானை தரிசித்த மோடி

பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காட்சி...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் * பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார்#PMNarendraModi pic.twitter.com/qQdhymANX7— Thanthi TV (@ThanthiTV) 9 June 2019

19:15 (IST)09 Jun 2019
தமிழகத்தில் பாஜக கொடி ஏறும் - பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி. மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் - ரேணிகுண்டா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

17:57 (IST)09 Jun 2019
நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார் : பாக்யராஜ்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

விஷால் தலைமையிலான அணிக்கு பாண்டவர் அணி என்று பெயர் உள்ளது போல, பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அணியின் பெயரை அறிமுகம் செய்துவைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது, நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னதாக கூறினார்.

17:34 (IST)09 Jun 2019
நடிகர் சங்க தேர்தல் - பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டல்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

விஷால் தலைமையிலான அணிக்கு பாண்டவர் அணி என்று பெயர் உள்ளது போல, பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெயிக்கப்போவது பாண்டவர் அணியா இல்லை சுவாமி சங்கரதாஸ் அணியா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

16:58 (IST)09 Jun 2019
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி மைதானத்தில் விஜய் மல்லையா

உலககோப்பை தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண, விஜய் மல்லையா வந்துள்ளார். வங்கிக்கடன் மோசடி வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, லண்டனில் வசிித்து வருவது குறிப்பிடத்தக்கது.

16:55 (IST)09 Jun 2019
விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் : கே.பாக்யராஜ்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் இன்று ( ஜூன் 9ம் தேதி ) வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது, விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது . சவுகிதார் எனக் கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம் நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை என கூறினார்.

16:49 (IST)09 Jun 2019
டெட் தேர்வு : 40 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

தமிழகத்தில்  ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) 1,081 மையங்களில் நடைபெற்றது.  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் தேர்வு எழுதினர். 40 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

16:07 (IST)09 Jun 2019
தொண்டர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவு

கட்சி குறித்தும் தேர்தல் முடிவு குறித்தும் யாரும் பொது வெளியில் கருத்துகளை கூறக்கூடாது என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

15:59 (IST)09 Jun 2019
சட்டசபை கூட்டத்தொடர் : ஸ்டாலின் கோரிக்கை

தமிழக சட்டசபை கூட்டத்தை உடனே நடத்திட வேண்டும் சட்டசபை கூட்டம்  நடைபெறாமல் இருப்பதும், அரசுத்துறை பணிகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

15:42 (IST)09 Jun 2019
கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை துவக்கம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில், 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை ( ஜூன் 10ம்தேதி) துவங்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.  ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதியிலும் விரைவில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

14:52 (IST)09 Jun 2019
டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையே இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓவல் மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியின் லைவ் ஸ்கோரைப் பார்க்க 

14:26 (IST)09 Jun 2019
இரட்டை தலைமை கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது - ஜவாஹிருல்லா

ஒரு கட்சிக்கு இரு தலைமை இருந்தால் அது அந்த கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லாது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்பது மிகவும் நியாயமான கோரிக்கை தான் என்று ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

14:06 (IST)09 Jun 2019
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் : பாண்டவர் அணி சார்பில் இருந்து தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று கூறினார்.

14:04 (IST)09 Jun 2019
NEET Exam 2019 : 400க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 3 பேர்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 2583 மாணவர்கள் இம்முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதில் மூன்று மாணவர்கள் மட்டுமே 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

13:45 (IST)09 Jun 2019
திமுக சார்பில் குடிநீர் விநியோகம்

சென்னை கொளத்தூர் தொகுதியில்,  பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு வரும் நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில், டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

13:21 (IST)09 Jun 2019
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி
13:18 (IST)09 Jun 2019
Southwest Monsoon Tamil Nadu

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

13:01 (IST)09 Jun 2019
NEET Exam Results in Tamil Nadu : 413 நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 2,583 மாணவர்கள் வெற்றி

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையங்களில் படித்து 2,583 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முறையாக பயிற்சி பெற்றால் எந்த தேர்விலும் வெற்றி பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:01 (IST)09 Jun 2019
Narendra Modi Visits Sri Lanka : உற்சாக வரவேற்பினை அளித்த இலங்கை அரசு

2 நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவுகள் சென்ற மோடி தற்போது இலங்கை சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்ட காட்சி 

11:54 (IST)09 Jun 2019
இலங்கை சென்றார் மோடி

மாலத்தீவுகளில் இருந்து இலங்கை சென்றார் மோடி. விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பினைக் கொடுத்தார் அந்நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே. 

11:23 (IST)09 Jun 2019
அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை. ஈ.பி.எஸ் மRறும் ஓ.பி.எஸ் தலைமையில் கட்சி நன்றாகவே இயங்கி வருகின்றது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

11:23 (IST)09 Jun 2019
12ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

ஒற்றைத் தலைமை விவகாரம் எதிரொலி : அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகின்ற 12ம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற உள்ளது.

10:50 (IST)09 Jun 2019
சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக தலைக்கவசம் அணிய உத்தரவு

சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீதும் முறையாக வழக்கு பதிவு செய்யுமாறு போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அவர்.

10:38 (IST)09 Jun 2019
Easter Sunday Bomb Blast

இலங்கை குண்டு வெடிப்பில் சம்பந்தபட்ட ஐவர் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது என்.ஐ.ஏ

இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

10:20 (IST)09 Jun 2019
8 lane express way : நல்ல திட்டங்கள் வரும் போது மக்கள் அதனை எதிர்க்கின்றனர் - தமிழிசை சௌந்தரராஜன்

8 வழிச்சாலை திட்டம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் நல்லதிட்டங்கள் கொண்டு வரும் போது மக்கள் அதனை எதிர்க்கின்றனர் என்றும் கூறியுள்ளார். 

10:02 (IST)09 Jun 2019
தென்மேற்கு பருவமழை எதிரொலி : 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு மழை

கேரளாவில் 8 நாட்கள் தாமதமாக பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் 48 மணி நேரங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை துவங்க உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் 15ம் தேதிக்குப் பிறகு தான் பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இதனால் தண்ணீர் பிரச்சனை சரியாகாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது. 

மேலும் படிக்க :  பருவமழை தாமதமானதிற்கு  காரணங்கள் என்ன ?

09:39 (IST)09 Jun 2019
குன்னம் எம்.எல்.ஏ ஆதரவு

ராஜன் செல்லப்பாவின் பேச்சிற்கு குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் ஆதரவு தந்துள்ளார்.

09:38 (IST)09 Jun 2019
ஒற்றைத் தலைமை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து

கட்சிக்கு ஒற்றை தலைமை இருந்தால் தான் நல்லது இரட்டை தலைமை என்பது தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

09:37 (IST)09 Jun 2019
கதர் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் கருத்து

கதர் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் ராஜன்செல்லப்பாவின் கருத்து குறித்து பேசியபோது அது அவருடைய தனிப்பட்ட கருத்து. தலைமையின் கருத்தோ கட்சியின் கருத்தோ இல்லை என்று கூறினார்.

09:37 (IST)09 Jun 2019
ஒற்றைத் தலைமை விவகாரம் : வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்

ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியதைத் தொடர்ந்து அதிமுகவுக்குள் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. ஒரு சாரர் ராஜன்செல்லப்பாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மறுசாரர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜன் செல்லப்பாவின் கருத்தினை வரவேற்பதாக கே.சி.பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

09:36 (IST)09 Jun 2019
Petrol Diesel Price in Chennai

சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று டீசலின் விலை 16 காசுகள் விலை குறைந்து ரூ.68.23க்கு விற்பனை செய்யப்படுகிறது.

09:31 (IST)09 Jun 2019
Modi Visits Thiruppathi : இலங்கை சுற்றுப்பயணம் முடித்த கையோடு ஏழுமலையான் தரிசனம்

பிரதமர் மோடி இன்று திருப்பதி வர உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவுகள் மற்றும் இலங்கை சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 04:30 மணிக்கு ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை புரிய உள்ளார்.

Modi Visits Sri Lanka Today : நேற்று மாலத்தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று இலங்கையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றார். இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்வுக்குப் பின்னால் இலங்கை சென்றுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார்.

Web Title:Breaking news in tamil live updates latest political tamil nadu india and sports news in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X