தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆண்டிமுத்து ராஜா (A Raja), 10 மே 1963 அன்று பெரம்பலூரில் பிறந்தார். மாணவர் பருவத்திலேயே அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த ராஜா, தி.மு.க கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பெரம்பலூர் தொகுதியிலிருந்து மூன்று முறையும், நீலகிரியிலிருந்து இரண்டு முறையும் என 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாயியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க.வின் மற்ற இரு உறுப்பினர்களான தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோருடன் சேர்த்து ராஜாவும் விசாரணை செய்யப்பட்டார். 2007, 2009 ஆகிய ஆண்டுகளில், மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசுகையில், நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின் என்றும், கள்ள உறவில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி கே. பழனிச்சாமி என்றும் ஆர் ராஜா பேசியிருந்தார்.
எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது, ஆ. ராசாவின் கண்ணியமற்ற பேச்சு குறித்து கண் கலங்கினார். இதனால் ஆ.ராசா தனது கண்ணியமற்ற பேச்சிற்காக முதலமைச்சரிடம் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, 2019 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.Read More
2G scam case : 2ஜி மொபைல் நெட்வொர்க்குகளுக்கான உரிமங்கள் தொடர்பான ஏலங்கள் நியாயமாக நடக்கவில்லை, அதற்கு பதிலாக குறைந்த விலையில் வழங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது.…
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவை ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப…
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆ. ராசா குறித்து கருத்து சொன்னதற்காக ஒருதலைபட்சமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து பா.ஜ.க கோவை மாவட்ட…
Coimbatore BJP leader Balaji Uttama Ramasamy arrested; cadres strike against police : திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர்…
இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் விதமாக பேசியதாக தி.மு.க எம்.பி ஆ. ராசா மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளதாக தமிழக பா.ஜ.க மூத்த…
Coimbatore: Bjp MLA Vanathi Srinivasan Tamil News: முதலமைச்சர் ராசா உடைய பேச்சை ஆதரிக்கிறாரா? அவரின் இந்த பேச்சை திராவிட முன்னேற்ற கழகம் ஒத்துக் கொள்கிறது.…
‘திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்துகள் இந்துக்களின் மத நம்பிக்கைகளை அழிக்கும் வகையில் அவதூறானவையாக உள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்?” என்று அனல் பறக்க…
ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து நான் கொச்சைப்படுத்தவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியததாக வெளியான வீடியோ வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து…