இந்தியத் திரைப்பட நடிகர் அக்ஷய் குமார் (Akshay kumar), 90க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் 2019-ஆம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
ஆக்ஷன், நகைச்சுவை, நாடகம் என அனைத்து விதமான படங்களிலும் நடித்து அசத்திய அக்ஷய் குமாருக்கு பிலிம்பேர், சைமா பல விருது அமைப்புகள் கீழ் பல விருதுகளை பெற்றுள்ளார்.
2008-ல் கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அக்ஷய் குமார்க்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பின்னர் 2009-ல் அக்ஷய் குமார் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் அக்ஷய் குமார் பிறந்தார். அவரது தந்தை அரசு பணியாளர். இளம் வயதிலே கலை மீது ஆர்வம் கொண்ட அக்ஷய் , நடனத்தில் கலக்க தொடங்கினார். பின்னர், மும்பைக்கு குடிபெயர்ந்த அவர், கோலிவாடா பகுதியில் வசித்தார். டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார்,
ஆரம்பத்தில் விளம்பத்தில் தோன்றிய அக்ஷய் குமார், தயாரிப்பாளர் பிரமோத் சக்ரவர்த்தியின் டீதார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம், திரையுலகில் அக்ஷய் குமார் ஜோலிக்க தொடங்கினார்.
அக்ஷய் குமார் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்று மகன் 2002-ல் பிறந்துள்ளான்.Read More
ராமர் சேது என்றால் என்ன, அது ஏன் பல சர்ச்சைகள் மற்றும் சட்ட வழக்குகளின் மையமாக உள்ளது, அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் என்ன? ஆகியவற்றை இங்கே விளக்குகிறோம்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு மகள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல…
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் இந்த சவாலை செய்து முடித்து, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
kanchana 3 in tamilrockers 2019: காஞ்சனா 3 ரிலீஸான கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இந்தப் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.