இந்திய திரைப்பட இயக்குனரான அட்லீ (Atlee), செப்டம்பர் 21, 1986 அன்று மதுரையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார். .இவர் சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் படித்து முடித்தார். அட்லீயின் முதல் குறும்படமான “என் மேல் விழுந்த மழைத் துளி” தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கியது. பின்னர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார்.
பின்னர், பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக 2010-ம் ஆண்டு எந்திரன் படத்திலும், 2012-ம் ஆண்டு நண்பன் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்பட வாயிலாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர்.
ராஜா ராணி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பீகில் என அடுத்ததடுத்து படங்களை இயக்கிட, முன்னணி இயக்குநராக வளம் வர தொடங்கினார்.
இவர் இயக்குனர் மட்டுமன்று A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த “சங்கிலி புகிலி கதவ தொற” படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
பிகில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் படமாக இல்லாமல் இருக்கலாம் என்பதை இயக்குனர் அட்லீ நமக்கு உறுதியளிக்கிறார். ஆனால், இது ஒரு தொடக்கம். இது விஜய்யின் சினிமா உலகத்தில் குறிப்பிடத்தக்க…
Bigil New Poster: பட விழாக்களில் கலந்துக் கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள்…