பிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்; பாஜக – தமாகா இணைப்பு வதந்தி என பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் பிரதமர்மோடியை புதன்கிழமை சந்தித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவுடன் தமாகா இணையும் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் சிறிதும் உண்மை இல்லை என்று கூறினார்.