இந்திய திரைப்பட நடிகை ஹன்சிகா மோட்வானி (Hansika Motwani) ஆகஸ்ட் 9 1991 ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் வல்லமை உடையவர். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார். தே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார்.
பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுரு மூதல் கதாநாயகியாக ஹன்சிகா திரையுலகில் அறிமுகமானார். பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா, நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார். உடல் எடையை குறைத்துள்ள ஹன்சிகா, சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு லைஸ்களை அள்ளிவருகிறார். ஹன்சிகா மோட்வானியின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகின்றதுRead More
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஹன்சிகா டிசம்பர் மாத தொடக்கத்தில் தொழில் அதிபரும் தனது பிஸினஸ் பாட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார்.
ஹன்சிகா மோத்வானி- சோஹேல் கதுரியா உடனான திருமணத்தில் சிவப்பு நிற லெஹங்காவில் அழகாக தோன்றினார்; அவர்களின் திருமண விழாக்களில் அவர்கள் அணிந்த உடை மற்றும் அணிகலன்களின் விவரங்கள்…
டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு பிறகு ஹன்சிகா-கதுரியா ஜோடி விருந்து அளித்தனர்.
இயக்குனர் கண்ணன் இயக்கும் படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை ஹன்சிகா, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
சன் டிவி, ‘குலேபகாவலி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.