கே. என். நேரு (K.N.Nehru),தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணக்கிளியநல்லூர் ஊரில்,1952-ம் ஆண்டு, நவம்பர் 9-ல் பிறந்தார். இவரின் தந்தை நாராயணசாமி ரெட்டியார், தாயார் தனலட்சுமி அம்மாள். உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நேரு, பி.யூ.சி வரை பயின்றவர். அரியநல்லூரில் மிளகாய் மண்டி, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி என ஆரம்பகாலங்களில் சொந்தத் தொழில் செய்துவந்தார். சிறு வயது முதலே கருணாநிதி மீது கொண்ட ஈர்ப்பால் திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். 1986 உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று புள்ளம்பாடி யூனியன் தலைவரானார். பின்னர் ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் எனப் படிப்படியாக அரசியல் களத்தில் வளர்ச்சியடைந்தார்
1989 சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.எல்.ஏ ஆனார். 1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சியில் மின்சாரத்துறை, பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1996-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்தபோது, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரானார். 2006-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம்தோல்வியடைந்தவர், 2016-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். தற்போது 2021 தேர்தலில் வெற்றிபெற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகியிருக்கிறார்.Read More
காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலில் தீவிரமாக இருந்தாலும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்கிறார் அமைச்சர் கே.என். நேரு. விவசாயத்தில் லாபமே இல்லாவிட்டாலும் விவசாயிகள் விவசாயத்தை விடுவதில்லை என்று விவசாயத்தின்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம். தேர்தலுக்கு போறோம். நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் கே.என்.…
மகளிர் சுயஉதவிக் குழுக்களை திருச்சியில் தொடங்கி வைத்தது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதில்லை. பேரரசர் போல் தளபதி, சிற்றரசர் போல் உதயநிதி…
“எதிர்க்கட்சிகளை எல்லாம் பேசவிட்டது ரொம்ப தவறா போச்சு. இனி தளபதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உங்களுக்கு இடியாகத்தான் இருக்கும்” என அமைச்சர் கே.என்.நேரு ஆவேசமாகப் பேசினார்.
உதயநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்றுக் கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாலும், தேனும் ஓடியதா? உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம்…
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செவ்வாய்க்கிழமை…
திருச்சியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 6-ம் தேதி திருச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் பங்கேற்க…
வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்; அ.தி.மு.க இடத்தை பிடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டில் தேர்தெடுக்கப்பட்டு வந்தால் தான். ஆனால், நீங்கள் நிரந்தரமாக பணியில் இருப்பீர்கள். மருத்துவத்துறை அதிகாரிகள்தான் அரசாங்கம். அதனால், நாங்கள் ஏதாவது வேகமாக பேசினாலும்…
சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும், இதற்கு முன் நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் கே.என். நேரு…
திமுகவில் திருச்சி மாவட்ட மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மாவட்ட செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு ஒன்று, அன்பில் மகேஷுக்கு ஒன்று என திமுக தலைமை பிரித்துக்கொடுத்துள்ளது.
டி.எஸ்.பி.க்கு எதையும் செய்யும் ஆற்றல் உள்ளது. ஒருவரை குற்றவாளியாக்குவார் அல்லது குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கவும் செய்வார் என திமுக அமைச்சர் கே.என்.நேரு பேசியியிருப்பது தமிழக காவல்துறையின்…