கமலா தேவி ஹாரிஸ்(Kamala Harris), அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தின் ஓக்லாந்தில் அக்டோபர் 20, 1964 அன்று பிறந்தார். கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். அவர் திருமணத்திற்கு முன்பு கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் குடியேறினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்தார். பின்னர், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை மணந்தார். டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்கா பொருளாதார நிபுணர் ஆவார். கமலா ஹாரிஸ் சகோதரி மாயா ஹாரிஸ் கனடாவில் குடியேறியுள்ளார்.
கமலா ஹாரிஸ், மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிஃபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவராக தேர்வானதால், தன் மேல் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021அன்று விலகினார். துணை-குடியரசு தலைவராய் கமலா இருப்பதால், அதே மேல் சபையின் தலைவராய் தற்போது கமலா உள்ளார்.Read More
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவரும் இந்தியாவில் உள்ள கமலா ஹாரிஸின் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக பாலச்சந்திரன் கூறினார்.