கர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் இரு மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 70.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குளச்சல் டிராபிக் இன்ஸ்பெக்டர் , உளவு துறை சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர் குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கே சென்று பாட்டிக்கு மீன் வாங்கி கொடுத்துள்ளனர்.
இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இன்று (மார்ச் 28) உயிரிழந்தனர். இது குறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். 3...
கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இவ்விருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
இவர்கள் இருவருக்கும் மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.