தமிழக பாஜகவின் புதிய தலைவர் வேல்முருகன் பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் என்றும் ராமன் இருந்த இடத்தில் முருகனை வைத்து இருக்கிறார் நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு 2வது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்
ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகனை பார்க்க பார்வையாளர்கள் மனு அளித்தால் பரீசிலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள முருகனின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை சிறை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும்.
ஜீவசமாதி அடையப்போவதாக தெரிவித்துள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.